இதுதான் டி.டி.வி.யின் வரலாறு... அமைச்சர் வெளியிட்ட யாருக்கும் தெரியாத ரகசியம்!

Published : Sep 07, 2018, 12:47 PM ISTUpdated : Sep 09, 2018, 07:27 PM IST
இதுதான் டி.டி.வி.யின் வரலாறு...  அமைச்சர்  வெளியிட்ட யாருக்கும் தெரியாத ரகசியம்!

சுருக்கம்

அம்மா ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லக்கூட தகுதி கிடையாது அவருக்கு. டி.டி.வி. எம்.பி.யாக இருந்த காலத்தில்  அம்மா இவரை என்ன செய்தார் என்பது யாருக்குமே தெரியாது என ஒட்டுமொத்த ரகசியத்தையும் வெளியிட்டுள்ளார் அமைச்சர் தங்கமணி.

ஜெயலலிதா இருந்தபோது அவரது கழக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கொட்டாவி விட கூட வாய் திறக்க அஞ்சுவார்கள். ‘இப்படி கருத்துரிமையை சிதைக்கிறதே இந்தம்மா’ என்று அமைச்சர்களுக்காக வக்காலத்து வாங்கியது தமிழகம். ஆனால் இன்றோ ‘ஏன் அந்தம்மா இந்தாளுங்க வாயெல்லாம் கட்டி வெச்சிருந்துச்சுன்னு இப்ப புரியுது!’ என்று  ஜெ.,வை நியாயப்படுத்தி நோகிறார்கள் மக்கள். காரணம், அமைச்சர்கள் வாயை திறந்தாலே வண்டி வண்டியாய் வந்து விழுகிறது கெக்கேபிக்கேத்தனம். 

ஆனால் அதே அமைச்சரவையில் இன்னமும் பழைய அமைதியுடன் வலம் வரும் ஒரு சிலரில் முக்கியமானவர் தங்கமணி. குட்கா ரெய்டு அ.தி.மு.க. ஆட்சிக்கே கிடுகிடுப்பை கிளப்பியிருக்கும் நிலையில் அதிசயமாய் வாய் திறந்திருக்கிறார் அவர். இப்பவும் வார்த்தைக்கு வார்த்தை தினகரனை பொளந்து கட்டியிருக்கிறார் இப்படி...

“ஆர்.கே.நகர் மக்கள் தினகரனின் ஒரு முறை ஏமாந்துவிட்டார்கள். அவர்களின் நிலையை பார்த்து இனி தமிழ்நாட்டில் எந்த தொகுதியும் டி.டி.வி.யிடம் ஏமாறாது. சொந்த தொகுதிக்கே போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் நிலையில்தான் இருக்கிறார் தினகரன். 

அம்மா ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லக்கூட தகுதி கிடையாது அவருக்கு. டி.டி.வி. எம்.பி.யாக இருந்த காலத்தில் நாடாளுமன்றத்தின் உள்ளேயே போகக்கூடாது என்று அம்மாவால் எச்சரிக்கப்பட்டவர். பெரிய குளம், போயஸ் கார்டன் என்று எங்கும் செல்ல அம்மா அவரை அனுமதிக்கவில்லை. விளைவு, புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அந்த சமயத்தில் கருணாநிதியுடன் சேர்ந்து அம்மாவின் பதவிக்கு குறிவைத்து சதித்திட்டம் தீட்டினார். இதனால் அம்மா அவரை கட்சியிலிருந்தே நீக்கினார். இதுதான் டி.டி.வி.யின் வரலாறு. 

அதேபோல் திவாகரனை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வோம் என்பது போல் ஒரு தகவல் இருக்கிறது. நிச்சயம் அது நடக்காது. அந்த குடும்பத்திலிருந்து யாரையும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். அப்படியொரு நிலையே அ.தி.மு.க.வுக்கு இல்லை.” என்றவர்  ரன்னிங் பிராப்ளமான ரெய்டு விவகாரத்தினுள் நுழைந்து...

“வருமான வரித்துறை, சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள். எங்களிடம் எந்த தப்புமில்லை, அதனால் பயமுமில்லை. சிலரைப் போல் பெரா வழக்கில் நாங்கள் சிறையிலிருக்கவுமில்லை, சிங்கப்பூர் பிரஜை என்று சொல்லி தப்பிக்கவுமில்லை.” என்றிருக்கிறார். 

கனமில்லாத மடியில் ஐ.டி.யும், சி.பி.ஐ.யிம் மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்வதன் மர்மம் என்ன? என்பதையும் மின்சார துறை அமைச்சர் சுவிட்ஸை போட்டதும் லைட் எரிவது போல் விளக்கியிருந்தால் தேவலை!

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!