அருண் ஜேட்லியை அசத்திய தங்கமணி – வேலுமணி! டெல்லியில் முடிந்த சூப்பர் டீல்!

Published : Sep 29, 2018, 10:14 AM ISTUpdated : Sep 29, 2018, 10:15 AM IST
அருண் ஜேட்லியை அசத்திய தங்கமணி – வேலுமணி! டெல்லியில் முடிந்த சூப்பர் டீல்!

சுருக்கம்

அ.தி.மு.க – பா.ஜ.க இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பனிப்போரை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும்.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி என்கிற யோசனையால் கடந்த ஒரு மாதமாக அ.தி.மு.கவை பாடாக படுத்தி வந்தது பா.ஜ.க. ஆனால் தி.மு.கவோ ஆட்சியை கலைத்தால் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என்று பா.ஜ.க விவகாரத்தில் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தான் திருப்பதியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பேசினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
   
அப்போது தான் தி.மு.கவின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டால் போதும் தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு ஒரு இமேஜ் கிடைத்துவிடும் என்று வெங்கய்யாவிடம் எடப்பாடி எடுத்துக் கூறியதாகவும், அதனை வெங்கய்யாவும் ஏற்றுக் கொண்டதாகவுமே சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் டெல்லி விரைந்த தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து பேசினர்.


   
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக அ.தி.மு.கவை ஆட்டுவித்து வருபவர் அருண் ஜேட்லி தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இதானல் தான் எடப்பாடி பழனிசாமியின் இருகரங்களாக இருக்கும் தங்கமணியும் – வேலுமணியும் ஜேட்லியை சந்தித்தது முக்கியத்துவமாக கருதப்படுகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.கவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் தான் கூறி வருகின்றன.
   
ஆனால் தமிழக அரசியலை பொறுத்தவரை எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டும் என்றாலும் மாறும். தி.மு.கவின் இமேஜையும், கூட்டணியையும் காலி செய்துவிட்டால் போது அ.தி.மு.க தொண்டர்களின் பலத்தோடு நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக கணிசமான இடங்களில் வெல்ல முடியும் என்று சில புள்ளி விவரங்களை ஜேட்லியிடம் வேலுமணியும், தங்கமணியும் எடுத்துக்கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை கேட்ட ஜேட்லிக்கும் தி.மு.கவிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதற்கு பதில் வழிய வரும் அ.தி.மு.கவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனை நல்லதாக தெரிந்துள்ளது.


   
இதனை தொடர்ந்து குட்கா ஊழல் விவகாரத்தில் கண்துடைப்பிற்கு சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்துவிட்டு தி.மு.கவின் இமேஜை காலி செய்யும வேலையில் ஈடுபடுமாறு ஜேட்லி அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஜேட்லியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்ததை தொடர்ந்து நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தங்கமணி மற்றும் வேலுமணி பேசியுள்ளனர். இந்த சந்திப்பும் எதிர்பார்த்தபடி நன்றாகவே இருந்துள்ளது. எனவே தற்போதைய சூழலில் பா.ஜ.க தங்களை தொந்தரவு செய்யாத வகையில் ஒரு டீலை பேசி முடித்துள்ள தங்கமணி , வேலுமணி இது தொடர்பான தகவலை முதலமைச்சர் எடப்பாடியிடம் பாஸ் செய்துள்ளனர்.
   
எது எப்படியோ நாடாளுமன்ற  தேர்தல் வரை தமிழக அரசை பா.ஜ.க தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டதாக சொல்கிறார்கள்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்