“சசிகலாவுக்கு கடும் கண்டனம்!!!” - ஆளுநரை விமர்சிப்பதா...?

 
Published : Feb 11, 2017, 09:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“சசிகலாவுக்கு கடும் கண்டனம்!!!” - ஆளுநரை விமர்சிப்பதா...?

சுருக்கம்

ஆளுநர் அதிமுக கட்சியை பிளவு படுத்தவே காலதாமதம் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூறிய கருத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நேரில் சென்று தனி தனியாக ஆலோசனை நடத்தினார்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அங்கிருந்து சென்னை திரும்பினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஆளுநர் முடிவுக்கு இன்றுவரை காத்திருந்தோம். ஆளுநர் காலதாமதபடுத்துவது கட்சியை பிளவு படுத்தும் செயல்  என தெரிவித்தார்.  

இதுவரை பொறுமையாக இருந்தோம் நாளை வேறுவிதமாக போராடுவோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் சசிகலாவின் இந்த கருத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளை ஆளுநர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

ஆளுனரை அரசியல்வாதி போல் விமர்சித்து கருத்து கூறுவது முறையானது அல்ல.

தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குழப்பமான சூழ்நிலையில் ஆளுநர் கால அவகாசத்தை எடுத்து கொள்வதில் தவறில்லை.

முடிவெடுப்பதற்கு போதுமான கால அவகாசத்தை ஆளுநருக்கு கொடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு