அது தீவிரவாத கட்சி... அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்... குடியரசு தலைவரிடம் சென்ற ஆளும் கட்சி எம்.பி.,க்கள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 2, 2021, 2:13 PM IST
Highlights

தெலுங்குதேசம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி இடையேயான மோதல் ஜனாதிபதி வரை சென்றுள்ளது. தெலுங்குதேசம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"எங்கள் எம்பிக்கள் அனைவரும் இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து, தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், குறிப்பாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் மற்றும் செய்தித் தொடர்பாளர் பட்டாபி ஆகியோர் எங்கள் கட்சி மற்றும் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராகப் பயன்படுத்திய அசிங்கமான வார்த்தைகளை விளக்கினர். டிடிபியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயசாய் ரெட்டி குழுவில் இடம்பெற்றிருந்தார்.

"டிடிபி ஒரு பயங்கரவாதக் கட்சியாக, சமூக விரோதக் கட்சியாக மாறிவிட்டது. அதற்கு நம்பிக்கை இல்லை, ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. அதனால், ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி தேர்தலில் போட்டியிடும் தார்மீக உரிமையை இழக்கிறது" என்று ரெட்டி கூறினார்.

இதுபோன்ற அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்திய ஆந்திரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர்களைத் தண்டிக்க, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971 போன்ற அவமதிப்புச் சட்டத்தை கொண்டுவர சட்ட அமைச்சருக்கு உத்தரவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:- அதே தவறை செய்யாதீங்க. முதல்வருக்கு மதிமுக அலர்ட்.. கூட்டணி கட்சியா, எதிர் கட்சியா, கலங்கடித்த வைகோ.!
ஆந்திரப் பிரதேசத்தில் "அராஜகத்தைத் தூண்டி, அரசால் ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதத்தை" ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) சுஷில் சந்திராவைச் சந்தித்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் ஒரிரு நாட்களுக்குமுன் புகார் அளித்தனர். 

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள், ’’ ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பகைமையை ஊக்குவிப்பதாகவும், சட்டமியற்றுபவர்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளின் நடத்தையை நிர்வகிக்கும் பல சட்டங்களை மீறுவதாகவும்’’ குற்றம் சாட்டினர்.

கடந்த மாதம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் செய்தியாளர் கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டியபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

முன்னாள் அமைச்சர் நக்கா ஆனந்த பாபுவுக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் கே பட்டாபி ராம் இந்த காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகம், விசாகப்பட்டினத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் இதர இடங்களை இந்த பிரச்சனைக்காக சூறையாடினர்.

இதையும் படியுங்கள்:- சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய்பீம்' படத்தை கட்டாயம் பார்க்க வேண்டிய 7 காரணங்கள் இதோ..!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் குடியரசுத் தலைவர் கோவிந்தை சந்தித்து, தென் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி இருந்தார்.

click me!