சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இதுவே முதல் முறை... சொன்னதை செய்து காட்டிய அதிரடி அமைச்சர் கே.சி.வீரமணி..!

By vinoth kumarFirst Published Jun 23, 2020, 2:48 PM IST
Highlights

தற்போதையே அரசியல் தலைவர்களில் வாய் சொல் வீரராக இல்லாமல் சொன்னதை செய்து காட்டிய  வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

தற்போதையே அரசியல் தலைவர்களில் வாய் சொல் வீரராக இல்லாமல் சொன்னதை செய்து காட்டிய  வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து இன்றுவரை சரியான சாலை வசதி இல்லை. இங்குள்ள மக்களின் அனைத்து தேவைகளுக்கும் மலை அடிவாரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று வருகின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட, அவரது உடலை டோலி கட்டி ஊரார் தங்களது கிராமத்துக்கு தூக்கி சென்றனர். இறந்தவரின் மனைவி 7 மாத கர்ப்பத்திலும் கணவன் உடலோடு மலையேறி சென்றார். அந்த படங்கள் வெளியாகி பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் மலை மீதுள்ள மக்களுக்கு எந்த வித நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் பணமும் இல்லாமல் சிரமப்பட்டனர். இதுப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் கவனத்துக்கு சென்றது. இதுப்பற்றி அதிமுகவினரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும், வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மே 21ம் தேதி அமைச்சர் வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் 10 கிலோ மீட்டர் மலையேறி அந்த கிராமத்துக்கு சென்றனர்.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான நடைப்பயணத்தில் மலையேறி நெக்னாமலை சென்று அக்கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள், நிவாரண பொருட்களை வழங்கினார்கள். அந்த கிராம மக்கள், எங்களுக்கு சாலை வசதி மட்டும் செய்து தாருங்கள், அதுவே எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உடனே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 

மற்ற அரசியல் கட்சி தலைவர்களைப் போல வாய் சொல் வீரராக இல்லாமல், மக்களுக்கு கொடுத்த வாக்கை தனது செயலால் நிரூபித்து காட்டியுள்ளார் அமைச்சர் கே.சி.வீரமணி. மக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக வந்து செல்ல ஒரு தற்காலிக சாலையை அமைத்து தருவேன் என்று சொன்னதை செய்து காட்டினார். அமைச்சர் கே.சி.வீரமணியின் செயலை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலும் பாராட்டி வருகின்றனர்.

click me!