தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமையான நேற்றுடன் சேர்த்து மூன்று நாட்களில், ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில், ரூ. 708 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமையான நேற்றுடன் சேர்த்து மூன்று நாட்களில், ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், 244.08 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, நேற்று மட்டும் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.52.87 கோடிக்கும், சேலம் மாவட்டத்தில் ரூ.49.21 கோடிக்கும், சென்னையில் ரூ.48.80 கோடிக்கும், திருச்சியில் ரூ.47.78 கோடிக்கும், கோவையில் ரூ.45.42 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு @ThanthiTV நீக்கியது. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் தந்தி டிவி செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தந்தி டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (2/2)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji)
அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் தந்தி டிவி செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தந்தி டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.