துணிவில்லையா சிதம்பரம் உங்களுக்கு...! கேள்வி கேட்டு அவமானப்படுத்தும் தமிழிசை...!

By Asianet TamilFirst Published Aug 21, 2019, 1:06 PM IST
Highlights

சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய நிலை. சிதம்பரம் இன்று தேட படுகிறார்.... எதற்காக தேடப் படுகிறார் என்றால் அவர் செய்த ஊழல் குற்றச்சாட்டிற்கு, செய்த தவறுக்காக தேடப்படுகிறார். இன்று நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் பொது வாழ்க்கையில் தூய்மை தேவை என்பதை வலியுறுத்துகிறது.பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் தலைமுறைக்கே தலைவராக இருந்தாலும் ....தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது சிதம்பரத்தின் ஊழல் போக்கு...
 

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சயின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அவரை கைது செய்ய சிபிஐ ஏற்பாடு செய்துவருகிறது, இந்த நிலையில் அவர் தலைவமறைவாகி உள்ளார் , அவரின் இந்த நடவடிக்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மிக கடுமையாக விமர்சித்துள்ளார், அது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய நிலை. சிதம்பரம் இன்று தேட படுகிறார்.... எதற்காக தேடப் படுகிறார் என்றால் அவர் செய்த ஊழல் குற்றச்சாட்டிற்கு, செய்த தவறுக்காக தேடப்படுகிறார். இன்று நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் பொது வாழ்க்கையில் தூய்மை தேவை என்பதை வலியுறுத்துகிறது. பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் தலைமுறைக்கே தலைவராக இருந்தாலும் ....தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது சிதம்பரத்தின் ஊழல் போக்கு...
சிதம்பரம் இரண்டு வகையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார். ஒன்று பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் இப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க நேரிடும். இரண்டாவது சட்டம் தன் கடமையைச் செய்கிறது சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
 தனக்கு ஒரு சம்மன் வந்து இருக்கிறது என்றால் அதை ஏற்று விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். பிரபலமானவர்கள் சாமானியர்கள் இரண்டு பேருக்கும் சட்டம் சமம்தான். ஒரு முன்னாள் நிதியமைச்சர் ,சட்டம் பயின்றவர், உச்சநீதிமன்றத்தின் பிரபலமான வழக்கறிஞர்....ஆனால் ஆனால் சிபிஐ சம்மன் அனுப்பியும் நியாயமான முறையில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் அவர் ஒத்துழைக்க மறுப்பது ஏன்? நேற்று ஆறு மணி வரை வெளியில் இருந்த சிதம்பரம் இரவு வரை இரவு முழுவதும் வீட்டுக்கு வராமல் அவரை தடுப்பது எது? மடியில் கனமில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது தானே...இப்பொழுது அவர் நடந்து கொள்வது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப தான் தவறு செய்திருக்கிறோம் என்பதை இந்த நாட்டிற்கு உணர்த்துகிறார்...

தானும் உணர்ந்து இருக்கிறார் .இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருந்த இடைத்தரகர் ஒருவர் அப்ரூவராக மாறி இருக்கின்ற காலகட்டத்தில் அவர் வகித்து கொண்டிருந்த மக்களால் கொடுக்கப்பட்ட அந்த நிதி அமைச்சர் பதவியை தன் சொந்த குடும்பம் பலன் பெற வேண்டும் என்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. தன்னுடைய சட்ட அறிவை... தான் செய்த தவறுகள் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தி பல முறை வாய்தா வாங்கி கைதில் இருந்து தப்பித்து இருக்கிறார் .ஆனால் நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனை மறுத்தது மட்டுமல்லாமல் இத்தகைய பொருளாதார குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் விசாரணையில் இருந்து ஒதுங்கினாரல் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் ஜாமீனை மறுத்திருக்கிறது. சிதம்பரம் தலைமறைவாகி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதிலிருந்து ஜாமீன் விலக்கு கிடைக்கும் , உடனே வெளியே வந்துவிடலாம் என்று சட்டம் தெரிந்தவர் சட்டத்திற்குப் புறம்பாக திட்டமிட்டிருக்கிறார்.

வழக்குகளைப் பற்றி தெரிந்தவர், நியாயமாக கடைபிடிக்க வேண்டிய வழக்கத்தை மீறி இருக்கிறார். ஆனால் சட்டம் சட்டம் தன் கடமையைச் செய்து உறுதியாக செய்து கொண்டிருக்கிறது.இதைத் தெரிந்தும் காங்கிரசை சேர்ந்தவர்கள் குறிப்பாக அண்ணன்  அழகிரி இது பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். ஆளும் கட்சியை எதிர்த்து பேசியதால் வந்த நடவடிக்கை என்கிறார். மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் நேற்றைய தினம் மாலை வரை டெல்லியில் தான் இருந்திருக்கிறார்... அப்பொழுதே கைது செய்திருக்கலாம்..‌ இன்னொன்று மத்திய அரசின் உளவுத் துறைக்கு சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருக்காது. சிதம்பரம் அவர்களே கைது தான் செய்ய வேண்டும் என்றால் அங்கேயே வந்து கைது செய்து இருக்கலாம் . சட்டரீதியாக ஒரு வீட்டில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்கு சென்றது சரியா என்று கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினர் டெல்லியில் இருந்து வீட்டிற்கு வராமல் இருப்பது சரியாஎன்பதற்கு பதில்சொல்ல வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி ரமணா அவரது ஜாமீன் மனுவை மறுத்திருக்கிறார்‌. அதுவே உயர்நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சிந்திக்க வைக்கிறது என்றுதான் அர்த்தம்.ஆக தவறு செய்தவர்கள் விசாரணை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் இதில் வேறு பாவம் செய்த தவற்றுக்கு வெட்கி தலை குனியாமல்... தான் செய்த தவறை மறைக்க சிதம்பரம் அமைச்சராக இருந்த பொழுது அவர்களை கைது செய்தார்கள் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கை என்று தவறான ஒரு தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சில ஊழல்வாதிகள். குற்றம் சாட்டப்பட்ட போது மரியாதைக்குரிய அமிர்ஷா அவர்களும் மரியாதைக்குரிய மோடி அவர்களும் விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்தார்கள் நீதிமன்றத்தை சரியான முறையில் அணுகினார்கள் வெற்றியும் பெற்றார்கள். இது வரலாறு. இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்.

 ஆக ஓடி ஒளிந்து கொண்டு, தவறை மறைத்து விட்டு அரசியல் காரணங்களை  சொல்வது எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் என்றாலே ஊழல்...அந்த ஊழல்வாதிகள்  சூழலுக்கும் ஊழலுக்கும் ஏற்றார்போல் பிரியங்கா வேறு ஆதரவாக tweet செய்கிறார் என்றால் இதைவிட தலைகுனிவு கிடையாது. தூய்மையான ஒரு ஆட்சி நடக்கிறது இதற்கு முந்தைய ஆட்சியில் காங்கிரசும் திமுகவும் தன்னாட்சி அதிகாரத்தை எவ்வளவு தவறாக சுயலாபத்திற்காக பயன்படுத்தினார்கள் என்பதைத் இந்த வழக்கின் மூலம் இந்திய மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள். ஆக சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய நிலை.  அவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

click me!