முதல்வரின் நம்பிக்கைகுரியவரான எஸ்.கே.பிரபாகரன் தமிழக உள்துறை செயலாளராக நியமனம்..!

Published : Nov 30, 2019, 01:57 PM IST
முதல்வரின் நம்பிக்கைகுரியவரான எஸ்.கே.பிரபாகரன் தமிழக உள்துறை செயலாளராக நியமனம்..!

சுருக்கம்

தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை செயலாளர் பதவி என்பது தமிழகத்தில் தலைமைச் செயலாளருக்கு அடுத்து அதிகாரமிக்க ஐஏஎஸ் பதவியாகும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி முதல் மாவட்ட எஸ்பிக்கள் நியமனம், பணியிடமாற்றம் வரை அனைத்தும் உள்துறை செயலாளரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சொல்லப்போனால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பு உள்துறை செயலாளர் தான்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வசம் இருக்கும் துறைகளில் முக்கிய துறையான காவல்துறையை உள்ளடக்கிய துறை உள்துறை என்பதால் யார் அடுத்த உள்துறைச் செயலாளர் என்பது அதிகார வட்டாரங்களில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 

இந்த பதவிக்கு 2 பெயர்கள் அடிப்பட்டு வந்தது. ஒருவர் தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் எஸ்.கே.பிரபாகர், மற்றொருவர் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளாராக இருக்கும் ஹன்ஸ் ராஜ் வர்மா. இவர்கள் இருவரில் பிரபாகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக் குரியவராக இருந்து வந்தார். 

இந்நிலையில், தமிழக உள்துறை புதிய செயலாளராக கொங்கு மண்டலத்தை சேர்ந்த எஸ்.கே.பிரபாகரனை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். மேலும், எஸ்.கே.பிரபாகரன் 1989-ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிசை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!