வாழும் “போதி தர்மர்” விஜயபாஸ்கர்... ! நிஜ மக்கள் காவலரின் அதிரடிகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 25, 2020, 11:32 AM IST
Highlights

இந்த நிலையில் தான் கொரோனா என்ற இந்த கொடிய நோயை விரட்டுவதற்காக  விஜயபாஸ்கர் எடுக்கும் முயற்சிகளை பார்க்கும் நடுநிலையாளர்களின் மனதில் அவர் “வாழும் போதி தர்மராகவே” பார்க்கப்படுகிறார். 

“ஏழாம் அறிவு” திரைப்படம்... ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த சினிமாவில் தான் காஞ்சிபுரத்தை சேர்ந்த “போதி தர்மர்” எனும் துறவி, சைனாவின் சவுலான் மாகாணத்தில் ஏற்பட்ட விசித்திர வைரஸ் நோயை தனது சக்தியின் மூலமாக கட்டுப்படுத்தி அங்குள்ள மக்களின் செல்வாக்கை பெற்றவர் ஆவார். இந்த நிஜக்கதை தான் திரைப்படமாக உருவாக்கப்பட்டு, இந்த பழைய உண்மை பின்னர் பிரபலமானது. 

ஆனால் தற்போது உலகம் உள்ள மோசமான சூழ்நிலையில் ஏர்போர்ட்டே இல்லாத குட்டி, குட்டி நாடுகளுக்கு எல்லாம் கூட கொரோனா தொற்றிக் கொண்டது. உலகமே அழிந்து போய்விடுமோ என்ற பயம் மக்களை சூழ்ந்துள்ளது. மொத்தம் 190 நாடுகளை இருள் சூழ்ந்துள்ள இந்த சீன வைரஸால், அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கு பிடிபடவில்லை. 

130 கோடி மக்கள் தொகை கொண்ட அதுவும் அசாதாரண மக்கள் குணம் கொண்ட நமது இந்திய நாட்டில் கொரோனா எனும் கொடிய, அசுர வேக வைரஸை கட்டுப்படுத்துவது கடினமான காரியம் ஆகும். வளர்ந்த உலக நாடுகளே இதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்த நிலையில் தான் ஏ என்றால் இசட் என்றும்... அ என்றால் அக்கு (ஃ) என்றும்... சொல்லக்கூடிய, பெரும்பாலும் எதிர் கருத்துக்களை கொண்ட மக்களுக்கான  அதிரடி சேவையில் இறங்கியுள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை உடன் சேர்ந்து வருவாய்த்துறை ஆகியோர் சும்மா ஸ்கெட்சு போட்டு அடித்து தூக்கி வருகின்றனர். நோய் அறிகுறி உள்ளவர்களை ஸ்கிரினிங் செய்யும் விதமும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் விதமும் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில், இவ்வளவு நேர்த்தியாக செய்வது ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா ஆபத்து என்பது தெரிந்தும், விமான நிலையம், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், அரசு மருத்துவமனைகள், கால்சென்டர் என இதுவரை அவர் சென்ற இடத்திற்கே சென்று மீண்டும், மீண்டும் விசிட் செய்தது 100 முறைக்கு மேல் தாண்டுமாம். 

எம்.பி.பி.எஸ் மருத்துவ பட்டதாரியான விஜயபாஸ்கரின் இந்த மருத்துவபூர்வமான செயல்பாடுகள் எடப்பாடியின் ஆட்சிக்கு பலம் சேர்க்கிறது என்பதும் மற்றொரு பக்க உண்மையாகும். திருச்சியை அடுத்த மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு  போராடிய போதும், டெங்கு மற்றும் பறவை காய்ச்சல் தென்மாவட்டங்களை பாதித்த போதும், வெள்ள நிவாரணம் மற்றும் கஜா புயலின் போது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் விஜயபாஸ்கர் செயல்பாடுகள் உண்மையிலேயே அளப்பறியது. 

இந்த நிலையில் தான் கொரோனா என்ற இந்த கொடிய நோயை விரட்டுவதற்காக  விஜயபாஸ்கர் எடுக்கும் முயற்சிகளை பார்க்கும் நடுநிலையாளர்களின் மனதில் அவர் “வாழும் போதி தர்மராகவே” பார்க்கப்படுகிறார். 

குறிப்பு: விஜயபாஸ்கரின் இந்த முயற்சிகளை புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் குழுவினர் ஆலோசனைகளை சொல்லி தடையில்லாமல் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறையில் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்  ‘மேன் பிகைண்ட்’ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தமிழக மக்களின் பாராட்டுதலுக்கு உரியவர்களே. 

click me!