தொடங்கியது ஓபிஎஸ் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம்..!!!

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 11:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
தொடங்கியது ஓபிஎஸ் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம்..!!!

சுருக்கம்

சென்னை, தலைமை செயலகத்தில்  நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. 

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தமிழக (பொறுப்பு) ஆளுநர் அலுவலகத்தில் இருந்து, செய்தி குறிப்பு ஒன்று கடந்த 11 ஆம் தேதி அன்று வெளியாகியது. அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அனைத்து அரசு துறைகளும், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்ச்ர ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டிருநத்து.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் கூடியது. நிதித்துறை அமைச்ச்ர ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. பருவமழை காலம் விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. மேலும், பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!