அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவைக்கு எச்சரிக்கை...!! பனியுடன் சேர்ந்து பொளந்து கட்டுப் குளிர்கால மழை..

Published : Feb 10, 2020, 01:30 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவைக்கு எச்சரிக்கை...!!  பனியுடன் சேர்ந்து பொளந்து கட்டுப் குளிர்கால மழை..

சுருக்கம்

நேற்று இரவு  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீரென லேசான மழை பெய்தது .  இது குளிர்கால மழை என்றும்  அது அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .    

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்  லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . வடகிழக்கு பருவ மழை முடிந்துவிட்ட நிலையில் ,  தமிழகத்தில் ஆங்காங்கே ஒருசில இடங்களில்  லேசான அளவில்  குளிர் கால மழை பெய்து வருகிறது . தமிழகத்தில் கடந்த ஆண்டு  ஆக்டோபர் மாதம் 17 ஆம் தேதி  வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.  ஒரு சில நாட்கள் முன்னரே பெய்யத் தொடங்கிய  மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது . 

 

தொடர்மழையால்  தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்  நிலைகளும் நிரம்பின , இந்நிலையில்  வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்தோடு முடியும் என்று கூறப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் வரை நீடித்தது .ஜனவரி 7-ல்  பருவமழை நிறைவடைந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி  வந்தது.  இந்நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் இருந்துவரும் நிலையில்,  நேற்று இரவு  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீரென லேசான மழை பெய்தது .   இது குளிர்கால மழை என்றும்  அது அதிக அளவில் பெய்ய வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . 

 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் குளிர்கால மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .  சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸ் ஆகவும் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!
ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!