
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தேடுக்கபட்டதன் மூலம் அவர் முதல்வராவது உறுதி செய்யபட்டுள்ளது.
அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அனால் பாஜக தலைவர் தமிழிசை மட்டும் ரொம்ப டென்ஷன் ஆயிட்டாங்க.
டென்ஷன் ஆனது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒன்னான்னு கேள்வி எழுப்பிருக்காங்க.
அதிமுக கட்சி தலைவராக யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பது அவர்கள் உரிமை.
ஆனால் மக்களை சந்திக்காமல் ஒருவர் முதல்வர் ஆகும் விஷயம் குறித்து தமிழக மக்கள் நிச்சயம் கேள்வி கேட்பார்கள். மேலும் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிமுகவின் உரிமை.
ஆனால் கூட்டத்தொடர் முடிந்த சில நாட்களிலேயே அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி சசிகலாவை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
இந்த விசயத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மிகவும் அவசரபட்டுவிட்டார்கள் தனது கருத்தை தமிழிசை டென்ஷனோடு தெரிவித்தார்.
2 மாத காலம் தமிழக முதல்வராக இருந்த ஓபிஎஸ் பல சவாலான சூழ்நிலைகளில் பல முக்கிய பிரச்சனைகளை திறமையாக கையாண்டார் என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
தமிழிசையின் பேட்டியின் மூலம் சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு தமிழக பாஜக விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.