கேரள முதல்வரின் உருவ பொம்மைக்கு செருப்படி... தமிழிசை மீது அதிரடி வழக்கு!

Published : Jan 03, 2019, 11:32 AM IST
கேரள முதல்வரின் உருவ பொம்மைக்கு செருப்படி... தமிழிசை மீது அதிரடி வழக்கு!

சுருக்கம்

கேரள முதலமைச்சர் பினரயி விஜயனின் உருவ பொம்மையை எரித்து செருப்பால் அடித்து போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 150 பேர் மீது சென்னையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை புறவாசல் வழியாக அனுமதித்து நயவஞ்சகமாக, சூழ்ச்சி செய்துவிட்டதாக கேரள அரசைக் கண்டித்து, நேற்று சென்னை பல்லவாரம் பகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, கேரள  முதல்வர் பினரயி விஜயனின் உருவ பொம்மையை எரித்து, அவரது உருவப் படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 150 பேர் மீது உருவபொம்மை எரித்தல், சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவை மீறி செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், பல்லவாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!