
உள்ளாட்சி தேர்தலில் பாஜக சக்தியை நிரூபிக்கும் எனவும், தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக மாறி வருவதாகவும் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.
இதையடுத்து அடுத்தடுத்து தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடியவில்லை என இழுக்கடித்து வந்தது.
இதைதொடர்ந்து விரைவில் தேர்தல் நட்தத வேண்டும் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தியதால் தேர்தல் நடத்த தயார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், உள்ளாட்சி தேர்தலில் பாஜக சக்தியை நிரூபிக்கும் எனவும், தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு ஊழலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், நீட் தேர்வை அரசியலாக்கக்கூடாது எனவும் கேட்டு கொண்டார்.