பாஜகவுடன் கூட்டு சேர துடிக்கும் ஸ்டாலின்..! தமிழிசை வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

Published : May 14, 2019, 01:27 PM ISTUpdated : May 14, 2019, 01:28 PM IST
பாஜகவுடன் கூட்டு சேர துடிக்கும் ஸ்டாலின்..! தமிழிசை வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாஜக கூட்டணி வைக்க முயற்சித்து வருவதாக அதிர்ச்சி மற்றும் பரபரப்பு தகவலை தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்தது தமிழக பாஜக தலைவர் தமிழிசை பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாஜக கூட்டணி வைக்க முயற்சித்து வருவதாக அதிர்ச்சி மற்றும் பரபரப்பு தகவலை தெரிவித்தார். 

தமிழிசையின் இந்த பேட்டியை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அதிமுகவினர் அதிர்ந்துபோயினர். ஏற்கனவே அதிமுகவுடன் பாஜக கூட்டணி உள்ள நிலையில் தமிழிசையின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜகவில் உள்ள ஒருவரிடம் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து கூட்டணி வைத்துக்கொள்வதற்காக பேசிவருகிறார். அதுமட்டுமின்றி முதல்வர் சந்திரசேகர ராவ் தேர்தலுக்கு பின்பு பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக தான் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார் என்ற குண்டையும் போட்டார். எனவே சந்திரசேர ராவ் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்று தெரிவித்தார். 

தமிழிசைக்கு தாகம் எடுத்துள்ளது என்ற ஸ்டாலினின் கருத்துக்கு பதிலளித்த அவர் தாமரைக்கு தண்ணீரிலேயே உள்ளதால் எனக்கு எப்போதும் தாகம் இல்லை என தமிழசை சூசமாக தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!