தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான்… எந்த மாற்றமும் இல்லை… அடித்துச் சொன்ன முரளிதர் ராவ்….

First Published Jun 29, 2018, 11:40 AM IST
Highlights
tamilisai contiune the president of BJP in tamilnadu told muralidhar rao


தமிழக பாஜ தலைவர் தமிழிசை மாற்றபடவுள்ளதாக வெளிவந்த தகவலில் உண்மையில்லை என்றும், அவரே தலைவராக நீடிப்பார் எனறும் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர்  ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே  மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா போன்றோருக்கும் தமிழிசைக்கும் பனிப்போர் நடந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை  மாற்றப்படவுள்ளார் என்றும் விரைவில் வேறு தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.

அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி குறித்து தமிழிசை தொலைக்காட்சி ஒன்றில் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழிசைக்கும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும் இடையே சவால் விடும் அளவுக்கு பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இது போன்ற தொடர் சிக்கலகளை தமிழிசை சந்தித்து வருவதால் அவர் மாற்றப்படவுள்ளதாகவும், பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு இது தொடர்பாக முரளிதர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ் இன்று தனது டுவிட்டர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழிசை  மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக தமிழிசையே நீடிப்பார் என்றும் தெரிவித்து இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

click me!