தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும் ஹசன் மவுலானா எம்எல்ஏ பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தலைவர் பதவிக்கு, ஆன்லைன் வாயிலாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த பதவிக்கு விச்சு லெனின் பிரசாத், ஜோஸ்வா, நவீன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் ஆன்லைன் வாயிலாக தேர்தல் நடைபெற்றது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து புதிய தலைவராக திருச்சியை சேர்ந்த விச்சு லெனின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும் ஹசன் மவுலானா எம்எல்ஏ பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தலைவர் பதவிக்கு, ஆன்லைன் வாயிலாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த பதவிக்கு விச்சு லெனின் பிரசாத், ஜோஸ்வா, நவீன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் ஆன்லைன் வாயிலாக தேர்தல் நடைபெற்றது.
இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருச்சியை சேர்ந்த விச்சு லெனின் பிரசாத் 2 லட்சத்து 4,947 ஓட்டுகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஜோஸ்வா, நவீன் ஆகியோ அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். இந்த மூவரையும் தலைமை டெல்லிக்கு அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நேர்காணல் அடிப்படையிலும் கட்சியில் கடந்த காலங்களில் இவர்களின் செயல்பாடுகளை வைத்தும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநில தலைவராக விச்சு லெனின் பிரசாத் நியமிக்கப்படுவதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.