தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் புதிய சாதனை... மாஸ் காட்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

By vinoth kumarFirst Published Aug 27, 2021, 1:27 PM IST
Highlights

இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது. 200 வார்டுகளில் 400 தடுப்பூசி முகாம்கள் மூலம் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு  வரை செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத பள்ளிக்கூட பணியாளர்கள், ஆசிரியர்களின் குடும்ப்த்தாருக்கு கொரோனா தடுப்பூசி செல்லும் முகாம்  சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் செயல்பட்டு வருகிறது. 

இதன்மூலம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது. 200 வார்டுகளில் 400 தடுப்பூசி முகாம்கள் மூலம் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

அதேபோல, தமிழகத்தில் இதுவரை இல்லத அளவாக நேற்றுதான் 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் மொத்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 2.95 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றார். மேலும், செப்டம்பர் 1ம் தேதிக்குள் 100 விழுக்காடு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றார். 

click me!