மொத்தமும் போச்சு.. ஒருவாரத்தில் பரவ வேண்டிய தொற்றை ஒரே நாளில் பரப்பிய தமிழக அரசு.. கடுப்பான ராமதாஸ்..!

Published : May 23, 2021, 06:37 PM IST
மொத்தமும் போச்சு.. ஒருவாரத்தில் பரவ வேண்டிய தொற்றை ஒரே நாளில் பரப்பிய தமிழக அரசு.. கடுப்பான ராமதாஸ்..!

சுருக்கம்

நாளை முதல் தளர்வில்லா ஊரடங்கு என்பதால் நேற்றும், இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை. அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொத்துக் கொத்தாக கொரோனா பரவுவதற்கே இது வழிவகுக்கும்!

தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு வாரத்தில் படிப்படியாக பரவ வேண்டிய கொரோனாவை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பரவச் செய்வதற்கான ஏற்பாடுதான் என ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- “நாளை முதல் தளர்வில்லா ஊரடங்கு என்பதால் நேற்றும், இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை. அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொத்துக் கொத்தாக கொரோனா பரவுவதற்கே இது வழிவகுக்கும்!

சென்னையிலிருந்தும், பிற நகரங்களிலிருந்தும் 4500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதும், வழக்கமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டதும் தேவையற்றவை. இவை தமிழகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்து விடும்!

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவே கடுமையான  ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது! 

ஆனால், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு வாரத்தில் படிப்படியாக பரவ வேண்டிய கொரோனாவை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பரவச் செய்வதற்கான ஏற்பாடுதான். ஒரு வார ஊரடங்கால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளர்வு தகர்த்து விட்டது என்பதே உண்மை!” என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!