பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

12:20 PM (IST) Mar 18
பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
12:18 PM (IST) Mar 18
அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.2.28 கோடி கடன் பெற உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12:15 PM (IST) Mar 18
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
12:14 PM (IST) Mar 18
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போன்று புத்தக கண்காட்சி நடத்தப்படும். ரூ.5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போல புத்தக கண்காட்சி நடத்தப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
12:09 PM (IST) Mar 18
வானிலையை துல்லியமாக கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12:00 PM (IST) Mar 18
பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வெஸ்லி தேவாலயம், நெல்லை கால்டுவெல் தேவாலயம், சென்னை நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி மற்றும் நாகூர் தர்கா ஆகியவை புனரமைக்கப்படும்.
11:55 AM (IST) Mar 18
தேசிய, உலக அளவில் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க பட்ஜெட்டின் சில முக்கிய குறிப்புகளை ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
11:52 AM (IST) Mar 18
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க , தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:50 AM (IST) Mar 18
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஓதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:46 AM (IST) Mar 18
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி உதவி என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:42 AM (IST) Mar 18
பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:41 AM (IST) Mar 18
பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:40 AM (IST) Mar 18
மாநகராட்சி பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்ய மானியமாக ரூ.1520 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:37 AM (IST) Mar 18
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:36 AM (IST) Mar 18
தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் வாங்கவும், பேருந்துகளை நவீன மயமாக்கவும் ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:33 AM (IST) Mar 18
தமிழ்நாவு மின்பகிர்மான இழப்பீடுகளை ஈடு செய்ய ரூ.13 ஆயிரத்து 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:29 AM (IST) Mar 18
கிழக்கு கடற்கரை சாலையை ரூ.135 கோடியில் 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:23 AM (IST) Mar 18
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
11:20 AM (IST) Mar 18
விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:17 AM (IST) Mar 18
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
11:11 AM (IST) Mar 18
வட சென்னையில் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்டவைகளுக்காக சென்னை ஆர்.கே நகரில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் வளாகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:07 AM (IST) Mar 18
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள் நடந்த ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
11:01 AM (IST) Mar 18
சென்னை அருகே தாவர பூங்கா அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10:59 AM (IST) Mar 18
தீயணைப்புத்துறைக்கு ரூ.496.52 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:54 AM (IST) Mar 18
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:52 AM (IST) Mar 18
தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அறிவித்துள்ளார். அதேபோல், வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:50 AM (IST) Mar 18
புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். அதற்காக ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
10:49 AM (IST) Mar 18
இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:47 AM (IST) Mar 18
பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளிகளை சீரமைக்க புதிய திட்டம். மறைந்த பேராசிரியர் அன்பழகன் பெயரில், ஆதிதிராவிடர் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளின் தரத்தை உயர்த்த புதிய திட்டம் ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
10:46 AM (IST) Mar 18
சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.
10:43 AM (IST) Mar 18
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:41 AM (IST) Mar 18
நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:39 AM (IST) Mar 18
தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.
10:39 AM (IST) Mar 18
முதியோர் ஓய்வோதிய திட்டம், மாற்றத்திறனாளிகள் ஓய்வதியம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:33 AM (IST) Mar 18
அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
10:32 AM (IST) Mar 18
சென்னை வெள்ளப்பகுதிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி ரூ1000 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த ஆண்டு அதற்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:31 AM (IST) Mar 18
தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நடத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தகவல் தெரிவித்துள்ளார்.
10:29 AM (IST) Mar 18
பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ.5 கோடியில் வெளியிடப்படும். ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை அமலுக்கு வந்த பின் தமிழ்நாடு 20 ஆயிரம் கோடி வரி இழப்பை சந்திக்கப்பட்டுள்ளது.
10:26 AM (IST) Mar 18
தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
10:23 AM (IST) Mar 18
வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார். மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.