AIADMK: அதிமுகவில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம்.. தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்..!

By vinoth kumarFirst Published Dec 1, 2021, 11:50 AM IST
Highlights

சிறுபான்மையினரான அன்வராஜா, நிலோபர் கபில் போன்றோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மதுசூதனன் மறைவையடுத்து அதிமுகவின் தற்காலிக  அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்படுதாக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து புதிய அவைத்தலைவரை நியமிக்கும் பணியில் அதிமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று காலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.  கட்சியின் முக்கிய முடிவுகள் பெரும்பாலும் செயற்குழுவில் தான் எடுக்க முடியும். செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் பேரில் தான் முடிவுகள் எட்ட முடியும். அந்த வகையில் அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், அதிமுகவின் தற்காலிக  அவைத்தலைவராக அனைத்துலக எம்ஜிஆர் செயலாளராக இருக்கக் கூடிய தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்படுதாக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகம் என்பதின் அர்த்தம் அதிமுகவில் உயர் பொறுப்பு கொடுக்கும் போது அதற்கான ஒப்புதலை பொதுக்குழு தான் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்மகன் உசேன் 1953ம் ஆண்டுகளில் இருந்து எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். 1972-ல் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மாதம் எம்.ஜி.ஆரை திமுகவில் இருந்து நீக்கிய போது அரசு பேருந்து ஓட்டுநராக இருந்தார். எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கிய போது அரசு பேருந்து வழியிலேயே இறுத்திவிட்டு இந்த ஆட்சியில் நான் ஓட்டுனராக நீடிக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு வாடகை காரில் நாகர்கோவில் விரைந்தார். இதனையடுத்து, 1972ம் ஆண்டு அதிமுகவில் தமிழ்மகன் உசேன் இணைந்தார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை தமிழ்மகன் உசேன் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினரான அன்வராஜா, நிலோபர் கபில் போன்றோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தொடர் குற்றச்சாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

click me!