ஹிந்தி இனி கிடையாது தயங்கி தயங்கி முடிவெடுத்த அமைச்சர்..!! பாண்டியராஜனை பணிய வைத்த ஸ்டாலின்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 9, 2019, 2:25 PM IST
Highlights

ஹிந்தியை கற்பிப்பது  தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிற்கு உதவியாக இருக்கும் என்பதுதானே தவிற வேறு நோக்கமில்லை என தெரிவித்தார்.  

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அம்முயற்சியை கைவிடுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிரடியாக அறிவித்துள்ளார்.  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயங்கி வரும்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான விருப்பப்பாடமாக ஹிந்தி ,  பிரஞ்சு உள்ளிட்ட மொழிகள் விருப்பப்பாடமாக கற்பிக்க  தமிழ் வளர்ச்சித் துறை முடிவு செய்திருந்தது இந்நிலையில் அத்துறை  அமைச்சர் மாபா பாண்டியராஜன் அத்திட்டத்தை சில தினங்களுக்கு முன்னர் துவக்கி வைத்தார். 

அதற்காக 6 லட்சம் ரூபாயை  நிதியாக தமிழக அரசு ஒதுக்கியது .  ஆனால் தமிழ் வளர்ச்சி துறை என்பது தமிழ் மொழியை  வளர்ப்பதற்காகவும் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காவுமே தவிர  தவிர இந்தியை வளர்க்க அல்ல என  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன .  இது குறித்து தனது கருத்தை பதிவு செய்திருந்த அமைச்சர் மாற்றம் பாண்டியராஜன் ,  ஹிந்தியை கற்பிப்பது  தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிற்கு உதவியாக இருக்கும் என்பதுதானே தவிற வேறு நோக்கமில்லை என தெரிவித்தார்.  அதேநேரத்தில் ,  இந்தியை படிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனவும் கூறினர் .  ஆனாலும்  சமூகவலைதளத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது .  இதுதொடர்பாக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் தமிழாராய்ச்சி  நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கும் முயற்சியை  கைவிடுவதாக அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார் . இந்நிலையில் இந்திக்கு மாற்றாக தெலுங்கு கற்பிக்க முடிவு செய்திருக்கிறோம் ,  அதேபோல் ஏற்கனவே முடிவு செய்தது போல பிரெஞ்சு மொழி கற்பது கற்பிப்பது தொடரும் . என அவர் தெரிவித்துள்ளார்.   தெலுங்கு கற்பிக்க மூன்று லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அவர்  கூறியுள்ளர். இதை தேவையில்லாமல்  திமுக அரசியலாக்கி விட்டதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

click me!