
குமரி முதல் டெல்லி வரை..! ஹவ் இஸ் கலைஞர்..? பாசத்தில் பரிதவிக்கும் தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை...
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து குமரி முதல் டெல்லி வரை உள்ள அனைத்து மாநில அரசியல் தலைவர்கள், தேசிய கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கலைஞரின் உடல் நலிவடைந்து உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்கு திமுக தொண்டர்கள் முதல், அரசியல் தலைவர்கள் வரை நலம் விசாரிக்க படை எடுத்து செல்ல ஆரம்பித்தனர்.
தொண்டர்கள் வருகையை தொடர்ந்து பாதுகாப்பிற்காக மருத்துவமனையை சுற்றி 2000 காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளது.
திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. பதட்டத்தை தணிக்கவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்து வருகிறது. காவலர்கள் அனைவரையும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
திமுக தலைவர் கருணாநிதியை பார்ப்பதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்
திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் தமிழக அரசு சார்பில் உதவி செய்ய தயாராக உள்ள தயாராக உள்ளோம் தமிழக முதல்வர் பேட்டி கொடுத்துள்ளார்
காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம்நபீ ஆசாத்,தமிழக காங்கிரஸ் பொறுப்பாளா் முகுல்வாஸ்ணிக் டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்தனர்
மதுரையிலிருந்து வரும் டிடிவி தினகரன், விமான நிலையத்திலிருந்து நேராக காவேரி மருத்துவமனை செல்கிறார்.
மேலும், மாநில முதல்வர்கள் முதல் தேசிய கட்சி தலைவர்கள் வரை கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் கலைஞர் பூரண நலன் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றனர்.