மாசாமாசம் இபி ரீடிங் எடுங்க... பணம் கட்ட முடியல.. திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரும் தங்கர்பச்சான்.!

By Asianet TamilFirst Published Aug 8, 2021, 9:39 PM IST
Highlights

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை செயல்படுத்த வேண்டும் என்று இயக்குநர், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் தங்கர்பச்சான் மின்கட்டணம் ரூ.36 ஆயிரம் கட்ட நேர்ந்ததையடுத்து அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு ஊழியர்கள் மாதந்தோறும் ஊதியம் பெறும் நிலையில், மின்சாரக் கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரு மாதங்களுக்கொடுமுறை எடுக்கப்படுவது ஏன்? மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் தன் வீட்டுக்கு கட்டணமாக  ரூ. 16 ஆயிரம் மட்டுமே  செலுத்த வேண்டியிருக்கும். தற்போது ரூ. 36 ஆயிரத்தை மின்சாரக் கட்டணமாக செலுத்தியுள்ளதாகவும், இது இரண்டேகால் மடங்கு அதிகம்” என்று வெளிப்படுத்தியிருந்தார். 
இந்நிலையில் தங்கர்பச்சான் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட  உடனே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மின்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டுக்கு நேரில் சென்றுள்ளனர். ஆனால், மின்துறை அதிகாரிகளிடம் மின் கணக்குத் தொடர்பாக கேள்வி எழுப்பவில்லை என்றும் தற்போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கணக்கீடு செய்யும் முறையினை மாற்றி மாதத்திற்கு ஒருமுறை கணக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தங்கர்ப்பச்சான் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அந்த அடிப்படையிலேயே தங்கபச்சான் தற்போது தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!