டி.டி.வி.தினகரன் சென்டிமெண்ட்... கடும் அப்செட்டில் ஓ.பிஎஸ்..!

Published : Apr 09, 2019, 04:04 PM ISTUpdated : Apr 09, 2019, 04:06 PM IST
டி.டி.வி.தினகரன் சென்டிமெண்ட்... கடும் அப்செட்டில் ஓ.பிஎஸ்..!

சுருக்கம்

சில தினங்களுக்கு முன் பிரசார வேன் கவிழ்ந்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  

சில தினங்களுக்கு முன் பிரசார வேன் கவிழ்ந்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும்  அங்கே போட்டியிடுபவர்களுக்கு ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. 1999ம் ஆண்டு பெரியகுளம் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், தேனி அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்ட பின்னரே பிரசாரத்தை துவக்கினாராம். அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். அடுத்தடுத்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்ட காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களும் இதே சென்டிமென்டை  தொடர்ந்தனர்.

ஆனால், தேனி அதிமுக மக்களவை தொகுதி வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் பிரசாரத்தை ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலில் துவக்காமல் மதுரை மாவட்டம், பாலமேட்டில் துவக்கினார். இதனால், சாமி குத்தம் ஏற்படுமோ என அதிமுகவினர் கலங்கி போய் இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து மகனை பட்டாளம்மன் கோயிலுக்கு அனுப்பி, கும்பிட்டு வருமாறு அனுப்பி இருக்கிறார். வரும் வழியிலே கார் டயர் பஞ்சராகி விட்டது. இப்போது தனது பிரசார வேன், ஊட்டி அருகே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தால் ஓபிஎஸ் கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருக்கிறார். இதுக்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா என ஜோசியர்களை,  ஓபிஎஸ் கலந்தாலோசித்து வருவதாக தொண்டர்கள் பரபரப்பாக பேசிகொள்கின்றனர். 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!