அம்மா வால்தான் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறைந்தது... தெர்மாகோல் காமெடியெல்லாம் இதுக்கு முன்னால ஜுஜுபி

By vinoth kumarFirst Published Nov 11, 2018, 11:09 AM IST
Highlights

ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட அன்பினால்தான் தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது’என்று நன்றிக்காய்ச்சலோடு சொல்லுகிறார் நம்ம விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட அன்பினால்தான் தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது’என்று நன்றிக்காய்ச்சலோடு சொல்லுகிறார் நம்ம விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜூ. 

‘இவர் இப்ப மட்டுமா இல்லை எப்பவுமா அப்படித்தானா? என்று ஊர் உலகம் மெச்சும்படி அவ்வப்போது சில அரிய உண்மைகளை எடுத்துவிடுபவர் நமது விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜூ. இம்முறை அவர் அலசி ஆராய்ந்திருப்பது பன்றிக் காய்ச்சல் டாபிக்கை. 
மதுரை பெத்தானியபுரத்தில் மாநகர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

இதில் கலந்துகொண்டு பேசும்போதுதான் அந்த அரிய உண்மையை அறிவித்தார் செல்லூரார். ‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டு 3,500 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிப்படைந்தனர். ஆனால் இந்த ஆண்டு 1,020 பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,025 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். ஆக ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட அன்பினால்தான் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்திருக்கிறது’’ என்றார். 

நடுவில் மகாராஷ்டிர மாநில பன்றிக் காய்ச்சல் தகவல் எதுக்கு என்று குழம்புபவர்களுக்காக... தமிழக மக்கள் போலவே மற்ற மாநில மக்களும் அம்மா மேல் அன்பு கொள்ள ஆரம்பித்தால் இந்தியா முழுக்க பன்றிக் காய்ச்சலை ஒழித்துவிட்டு அம்மா மீது நன்றிக் காய்ச்சலோடு மட்டுமே திரியலாம் என்று சொல்ல வருகிறார் நம்ம விஞ்ஞானி.

click me!