வேரோடு விழுந்த வியாபாரக் கூட்டணி... கிறிஸ்துமஸ் ட்ரீ குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு!

Published : Dec 03, 2019, 06:36 PM IST
வேரோடு விழுந்த வியாபாரக் கூட்டணி... கிறிஸ்துமஸ் ட்ரீ  குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு!

சுருக்கம்

கன்யாகுமாரியில் ஆரம்பித்த வியாபாரக் கூட்டணி  தூத்துக்குடியில் பிளந்து, புதுக்கோட்டையில் முறிந்து சென்னையில் வேரோடு விழுந்தது’என்று பதிவிட்டுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். 

கூம்பாக இருந்தால் மசூதி, உயரமாக இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 


 
இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிறைய அசிங்கமான பொம்மைகள் இருக்கிற இடத்தை ஆசையோட பாக்க வந்த அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க" என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் தற்போது ஒருவர் கிறிஸ்துமஸ் ட்ரீ முன்பு கையில் ஒரு பந்துடன் பேசும் போது அவர் பின்னாடி இருந்த கிறிஸ்துமஸ் ட்ரீ எதிர்பாராத விதமாக அவர் மீது விழுந்தது. இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ’கன்யாகுமாரியில் ஆரம்பித்த வியாபாரக் கூட்டணி  தூத்துக்குடியில் பிளந்து, புதுக்கோட்டையில் முறிந்து சென்னையில் வேரோடு விழுந்தது’என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக நடந்த செயலுக்கு இப்படி கருத்து தெரிவிக்கலாமா? என்று சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!
Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!