மம்தாவுக்கு முதல் அடி... ஆட்டத்தை ஆரம்பித்த மோடி!! தாவினார் ஒரு எம்.எல்.ஏ...

By sathish kFirst Published May 25, 2019, 1:26 PM IST
Highlights

பீஜ்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் MLA  வான சுப்ரங்சூ ராய், தொடர்ந்து இரண்டு முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அம்மாநில பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முகுல் ராயின் மகன் சுப்ரங்சூராய், அவரது தந்தையைப் போலவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பிஜேபியில் இணைய உள்ளதால், மோதி தனது ஆட்டத்தை ஆரம்பித்ததாகவும், இது மம்தா பேனர்ஜிக்கு விழுந்த முதல் அடி விழுந்ததாகவே சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் வரலாறு காணாத அளவு பாஜக தனிப்பெரும்பானமையுடன் அமோக வெற்றி பெற்றது. மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸின் எஃகு கோட்டை, ஆனால் பிஜேபி அந்த எஃகு கோட்டையை அடித்து நொறுக்கியுள்ளது.  பாஜக 2வது இடத்தை பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களும், பாஜக 18 இடங்களும், மற்றவை ஓரிடமும் பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

542 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் போதுமான நிலையில், பிஜேபி கூட்டணி 353 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கூட்டணி 90 தொகுதிகளை மட்டுமே பெற்று பெரும் சரிவை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாள் கூட ஆகாத நிலையில், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் பிஜேபிக்கு தாவு இப்போது பிளான் போட்டு வருகின்றனர்.

பீஜ்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் MLA  வான சுப்ரங்சூ ராய், தொடர்ந்து இரண்டு முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அம்மாநில பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முகுல் ராயின் மகன் சுப்ரங்சூராய், அவரது தந்தையைப் போலவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பிஜேபியில் இணைய உள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி, சுப்ரங்சூ ராயை திரிணாமுல் காங்கிரஸ் தலைமை 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக சஸ்பென்ட் செய்தது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சுப்ரங்சூ ராய் அலட்டிக் கொள்ளாமல் பிஜேபியில் சேரவுள்ளதாக அசால்ட்டாக  அறிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், என்னால் இனி நிம்மதியாக மூச்சு விட முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பலர் மூச்சுத் திணறலில் உள்ளனர். என்னைப்போலவே பலரும் பிஜேபியில் சேர்வர், என்று கூறி இருக்கிறார். என் மீது ஜோடிக்கப்பட்ட குற்ற வழக்குகள் போட வாய்ப்புள்ளது அல்லது என் மீது தாக்குதல் கூட நடத்தப்படலாம் என என் தந்தை எச்சரித்துள்ளார். இதனால் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பிஜேபியில் இணைய உள்ளேன். எனக்கு இந்த கட்சியில் உரிய மரியாதை இல்லை. அதனால் புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கிறேன். தற்போது மேற்கு வங்காளத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறேன். 

மேலும் பேசிய அவர், எனது தந்தை என்னை விட சிறப்பான நிர்வாகியாக கருதுகிறேன். அவர் மேற்குவங்கத்தின் சாணக்கியராக அழைக்கலாம் என்று தனது தந்தையை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். சுபரங்சூ ராயின் தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த இவர்,  மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பிஜேபியில் இணைந்தார். அதே போல தற்போது, அவரது மகனும் பிஜேபியில் சேர இருக்கிறார். இவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் சேர உள்ளதாக தெரிகிறது. 

தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது ஒரு MLA, பிஜேபியில் இணைவதால் மோடி தனது அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளதாகவும், இது மம்தா பேனர்ஜிக்கு விழுந்த முதல் அடியாகவே பார்க்கப்படுகிறது.

click me!