விசுவாசம் வேறு... அரசியல் வேறு... நான் எப்போதும் சசிகலா ஆதரவாளர்.. குட்டையை குழப்பும் கருணாஸ்..!

Published : Dec 12, 2019, 05:36 PM IST
விசுவாசம் வேறு... அரசியல் வேறு... நான் எப்போதும் சசிகலா ஆதரவாளர்.. குட்டையை குழப்பும் கருணாஸ்..!

சுருக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிக்கிறது. பிரச்சாரமும் செய்ய உள்ளேன். நாங்கள் தேர்தலில் போட்டியிடவும் விரும்புகிறோம். அதை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன் என்றார். குடிமராத்து பணிகளை சிறப்பாக அதிமுக அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. என்னுடைய தொகுதியில் அதன் பயன் கிடைத்துள்ளது. மக்கள் ஆதரவு அதிமுக அரசுக்கு பெருகி உள்ளது. 

நான் எப்போதும் சசிகலா ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. விசுவாசம் வேறு, அரசியல் வேறு எனவும் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும்,  எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிக்கிறது. பிரச்சாரமும் செய்ய உள்ளேன். நாங்கள் தேர்தலில் போட்டியிடவும் விரும்புகிறோம். அதை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன் என்றார். குடிமராத்து பணிகளை சிறப்பாக அதிமுக அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. என்னுடைய தொகுதியில் அதன் பயன் கிடைத்துள்ளது. மக்கள் ஆதரவு அதிமுக அரசுக்கு பெருகி உள்ளது. 

மேலும், அவர் பேசுகையில், நான் சசிகலா ஆதரவாளர் தான். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு மற்ற நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சசிகலா ஆதரவாளர் என்று சுறியுள்ளது எடப்பாடியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி