யார் பக்கம் போவது குழப்பத்தில் சூப்பர் ஸ்டார்! குழப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் டெல்லி மேலிடம்...

By sathish kFirst Published Sep 8, 2018, 11:57 AM IST
Highlights

மாஸ் நடிகர்களை வைத்து அரசியல் கிடுகிடுப்புகளை கிளப்பிவிடுவது இந்திய அரசியல்வாதிகளுக்கு ரசகுல்லாவை தேனில் தொட்டு சாப்பிடுவது போல. அந்த வகையில் இப்போது ரசகுல்லாவாகி இருக்கிறார் மோகன்லால். 

மலையாள மெகா ஸ்டார் மோகன்லால் சமீபத்தில் நடந்த கிருஷ்ணஜெயந்தியன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார். அப்போது தான் நடத்தி வரும் விஸ்வசாந்தி பவுண்டேஷன் குறித்து பிரதமரிடம் பல முக்கிய தவகவல்களை பகிர்ந்து திரும்பினார்.  மோடியுடனான சந்திப்பு பற்றி லால் தனது ட்விட்டரில் சிலிர்க்க, மோடியின் ட்விட்டர் பக்கமும் லால் பற்றி சிலாகித்திருந்தது. 

இது போதாதா பி.ஜே.பி.யினர் சில பரபர பட்டாசுகளை கொளுத்திப் போடுவதற்கு? இதோ துவங்கிவிட்டனர் ‘சூப்பர் ஸ்டார் மோகன்லால் பி.ஜே.பி.யில் இணைகிறார்’ என்று டிரெய்லர் ஓட்ட துவங்கிவிட்டனர். இந்த தகவல் ஏற்கனவே அந்த கட்சியில் இணைந்து, சூட்டோடு சூடாக ராஜ்யசபா எம்.பி.யும் ஆகிவிட்டார். ஆனால் அவரால் கேரள பி.ஜே.பி.க்கு எந்த லாபமுமில்லை என்று சீனியர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம். 

எனவே நாடாளுமன்ற தேர்தலுக்குள் ஒரு மெகா செலிபிரெட்டியை கட்சிக்குள் இழுத்தே ஆக வேண்டும் எனும் தீர்மானத்தில் இருக்கிறார்கள் என்பது டாப் தகவல். அதன் ஒரு நிலையாகவே லால் ஏட்டனுக்கு பிரதமருடனான சந்திப்புக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, இந்த சிலிர்ப்பான சந்திப்பு நிச்சயம் லாலுக்கு ஒரு அரசியல் கதவை திறந்துவிடும்! என்று பகிரப்படுகிறது. 

ஆனால் மோகன்லாலோ இந்த ஹேஸ்யங்களை சின்ன புன்னகையுடன் கடந்து சென்று கொண்டேயிருக்கிறார். லால் பி.ஜே.பி.யில் இணைவார் எனும் தகவலுக்கு வேறொரு கோணத்தில் விளக்கம் கொடுக்கிறது இன்னொரு கூட்டம். அவர்கள் “மம்மூட்டி வெளிப்படையான கம்யூனிஸ ஆதரவாளர். அவரை பல முறை கட்சியில் இணையும்படி கேட்டும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. வெளியிலிருந்தபடி காம்ரேடுகளை ரசிக்கிறார் அவ்வளவே. 

இதனால் நொந்து போன காம்ரேடுகள் அடுத்து மோகன் லாலுக்கு குறி வைத்துள்ளனர். அதனாலேயே சமீபத்தில் நடந்த திரைப்பட விருது விழாவுக்கு மோகன் லாலை சிறப்பு அழைப்பாக அழைத்தனர். இந்த செயலுக்கு முக்கிய நடிகர்களே எதிர்ப்பு தெரிவித்தும் கூட அதை குப்பையில் தூக்கி போட்டது கம்யூனிஸ அரசு. அவர்களின் ஒரே நோக்கம் மோகன்லாலை குளிர்விப்பதிலேயே இருக்கிறது. 

திடீரென காம்ரேடுகள் லால் மீது காட்டும் அன்பை கண்டு மிரண்டுதான், அவர் கேட்டதுமே மோடி உடனான சந்திப்புக்கு பி.ஜே.பி.தலைமை ஓ.கே. சொல்லிவிட்டது! ஆக இப்போது இரண்டு கட்சிகளுமே ஆளுக்கொரு கையை பிடித்து இழுக்க, யாருக்கு ஆதரவான முடிவை எடுப்பது என்று தெரியாமல் லால் ஏட்டன் தெறிக்கிறார்.” என்கிறார்கள்.

click me!