செமையா சிக்கும் சசிதரூர்…. சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டினாரா?

First Published Apr 15, 2018, 6:54 AM IST
Highlights
sunandha pushkar sucide case sasi tharoor will be punished


சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியது, ஆதாரங்களை அழித்தது போன்ற குற்றச்சாட்டுக்கள் சசிதரூர் மீது பதவு செய்யப்பட்ட நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரது கணவரும், காங். எம்.பி.யுமான சசிதரூருக்கு எதிராக டில்லி போலீசார் குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு டெல்லி சொகுசு ஒட்டலில் தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. சசிதரூருக்கு பாகிஸ்தான் பெண் நிருபருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு அம்பலமானதில் ஏற்பட்ட தகராறு தான் சுனந்தாவின் சாவுக்கு காரணம் என கூறப்பட்டது.

இதையடுத்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில்  சுனந்தா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் அவரது ரத்த மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள தடயவியல்துறைக்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர்.

அந்த விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் டில்லி போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியது, ஆதாரங்களை அழித்தது என 2 பிரிவுகளில் சசிதரூர் மீது டெல்லிபோலீசார் குற்றாச்சாட்டினை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி ,சுனந்தாவின்  ரத்த மாதிரிகள் அறி்க்கையின் படி கொடிய விஷம் அவரது உடலில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே சசிதரூர் மீதான குற்றச்சாட்டு உறுதியெனில் அவருக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என தெரிவித்தார்.

click me!