ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழ் பொறுக்கிகள் - சுனா சாமியின் டுவிட்டரால் இளைஞர்கள் கொதிப்பு

First Published Jan 12, 2017, 6:57 PM IST
Highlights

தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் சுப்ரமணியம் சுவாமி ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கிண்டலடித்து டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். 
இந்நிலையில் போராட்டம் நடத்துபவர்களை , இளைஞர்களை மாணவர்களை பொறுக்கிகள் என்று டுவிட்டரில் சுப்ரமணியம் சுவாமி பதிவு செய்துள்ளது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே காவிரி நீர் பிரச்சனையில் அவா தண்ணீ தர மாட்டா நீங்கள் கடல் நீரை உப்பு நீக்கி பயன்படுத்த வேண்டியது தானே என்று பேசியவர்.
அதன் பின்னர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ச்சியாக எதிராக எழுதி வருகிறார். தமிழ் பொறுக்கிகள் எலிகள் என எப்போதுமே டுவிட்டரில் எழுதிவரும் சுப்ரமணியம் சுவாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது கொச்சை புத்தியை காட்டியுள்ளார்.


தன்னெழுச்சியாக திரண்டு போராடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் , மாணவர்கள் , அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களின் போராட்டத்தை கண்டு மத்திய அரசு ஆடிப்போயுள்ளது. 


இந்நிலையில் தனது கோபத்தை காட்டும் விதத்தில் சுப்ரமணிசுவாமி தமிழ் பொறுக்கிகள் மற்றவர்கள் அனுதாபத்தை தேடும் வண்ணம் தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள்.


இதன் மூலம் தேசபக்த சக்திகளின் அனுதாபத்தை பெறலாம் என்று தமிழ் சினிமாவில் பேசும் ஆங்கிலம் போல டுவிட் செய்கிறார்கள். தமிழகத்தின் நிலை இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டதே என்று போட்டுள்ளார்.


சுப்ரமணியன் சுவாமியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து வலைதளங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.
1962 ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அன்றைய பிரதமர் நேரு நான்சென்ஸ் என்று சொன்ன வார்த்தைக்காக தமிழகம் கொந்தளித்து கருப்பு கொடி காட்டியது. ஆனால் சாதரண சுப்ரமணியம் சாமி பொறுக்கிகள் என்று போட்டு தன் எதிர்ப்பை காட்டுகிறார்.

click me!