
குஜராத்தில் ராகுல் காந்தியின் கோவில் தரிசனத்தை தொடர்ந்து, அவர் ஒரு இந்து என்பதை அறிவிக்கும்படியும் வலியுறுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் 3 நாட்கள் பிரசாரம் செய்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள பல்வேறு இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.
இது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
அதில், ராகுல் வசிக்கும் டெல்லி ஜன்பாத் சாலையில் உள்ள 10-ம் எண் வீட்டில் தேவாலயம் இருக்கலாம் என்றும், அவர் கிறிஸ்தவராக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.
ராகுல் இந்துதான் என்பதை முதலில் அறிவிக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் சுப்பிரமணியசாமி குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்துக்களின் வாக்குகள்
இந்துக்களின் வாக்குகளைக் கவரவே ராகுல் காந்தி குஜராத்தில் கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறார் என்பதை இந்த பதிவின் மூலம் சூசகமாக சுப்பிரமணியசாமி தெரிவித்து இருக்கிறார்.
குஜராத்தில் துவாரகா கிருஷ்ணர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கிய ராகுல், பின்னர் சுரேந்திரநகரில் உள்ள சோட்டிலா கோயில், கக்வாட் கிராமத்தில் உள்ள கோடல் தாம் கோயில், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜலராம் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது