
தமிழகத்தில் அனைத்துக் கட்சியினருமே ஊழல்வாதிகள்தான் என்றும், எனக்கு நேரம் கிடைத்திருந்தால் வழக்கு போட்டு கருணாநிதியையும் ஜெயில்ல தூக்கி வச்சிருப்பேன் என பாஜக எம்.பி. சுப்ரமணியன்சுவாமி தெரிவித்தார்.
பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி அவ்வப்போது பரபரப்பான பேட்டிகள் கொடுத்து அனைவரையும் அசர வைத்துவிடுவார். ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கை முதன்முதலில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றவர் சுப்ரமணியன்சுவாமிதான்.
இதே போன்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான 2ஜி வழக்கையும் சுப்ரமணியன்சுவாமிதான தொடர்ந்தார். இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா, விடுவிக்கப்பட்டாலும், சொத்துக்குவிப்பு வழக்கில் அனைவருக்கும் தண்டனை கிடைத்துவிட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று சுப்ரமணியன்சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் தான் என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை ஜெயிலில் தள்ளியது தான்தான் என்றும், தனக்கு நேரம் கிடைக்காததால், கருணாநிதி மீது வழக்கு தொடர முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
கருணாநிதி மீது வழக்கு தொடர்ந்திருந்தால் ஜெயலலிதா, சசிகலா போல் கருணாநிதியும் ஜெயிலுக்கு போயிருப்பார் என்றும் சுப்ரமணியன்சுவாமி தெரிவித்தார்.