மாணவர்களுக்கு இலவச இணைய வசதியுடன், ஸ்மார்ட் போன் தேவை..!! தமிழக அரசுக்கு எம்.எல்.ஏ அன்சாரி கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2020, 2:04 PM IST
Highlights

கொரோனா தொற்று காரணமாக இக்கல்வியாண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.அதனால் பள்ளிக்கூட வகுப்புகள் தற்போது  இணையம் வழியாக (online) நடைப்பெற்று வருகின்றது.

ஊரடங்கு காலத்தில் விட்டில் இருந்தே மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் பயின்று வருவதால், அதற்கு ஏதுவாக விலையில்லா செல்போன்களை அவர்களுக்கு வழங்கவேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக இக்கல்வியாண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதனால் பள்ளிக்கூட வகுப்புகள் தற்போது  இணையம் வழியாக (online) நடைப்பெற்று வருகின்றது. இந்த வழிமுறை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை எளிய குடும்பத்து பிள்ளைகள் பெற முடியாத சூழல் பரவலாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, 6 மாதங்களுக்கு இலவச இணைய வசதியுடன் கூடிய திறன் பேசிகளை  (Smartphone) விலையில்லாமல் வழங்கிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

தற்போது பஞ்சாப் மாநில அரசு மாணவர்களுக்கு, இவ்வகை திறன்பேசி (Smartphone)எனப்படும் அலைபேசிகளை விலையில்லாமல் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதை முன்மாதிரியாக கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.என அதில் கூறப்பட்டுள்ளது. 

click me!