நட்சத்திர ஓட்டலில் ஸ்டாலினும், விஜய்யும்!: ரகசியத்தை உடைக்கும் செல்லூர் ராஜு.

By Vishnu PriyaFirst Published Sep 23, 2019, 6:17 PM IST
Highlights

நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு புகழிடம் அளிப்பவர்களுக்கு எதிராகவும்  செயல்பட வேண்டிய தருணம் இது. 


*    கருணாநிதியின் வாழ்க்கையானது போராட்டங்களால் நிறைந்தது. சிறு வயதில் திருவாரூரில் பள்ளியில் அனுமதிக்க மறுக்கப்பட்ட போது துவங்கிய போராட்டம், மரணத்துக்குப் பின் மெரீனாவில் இடம் பெறுவது வரை தொடர்ந்தது.
-    மு.க. ஸ்டாலின் (கருணாநிதியின் மகன், தி.மு.க. தலைவர்)

*    நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு புகழிடம் அளிப்பவர்களுக்கு எதிராகவும்  செயல்பட வேண்டிய தருணம் இது. தங்கள் நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க தவறியவர்கள், இந்தியாவில் இல்லாத பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கின்றனர். 
-    நரேந்திர மோடி (இந்திய பிரதமர்)

*    தமிழக மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அவரை அங்குதான் வைத்துள்ளனர். இதை நடிகர் விஜய்யை கேட்டுத் தான் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. 
-    கடம்பூர் ராஜூ (தமிழக அமைச்சர்)

*    கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகம் அறியச் செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. எனவே விரைவில் டெல்லி சென்று மனித வள மேம்ப்பாட்டு துறை சார்ந்த மந்திரிகளை சந்தித்துப் பேச உள்ளேன்.
-    மாஃபா பாண்டியராஜன் (தமிழக அமைச்சர்)


*    நிறுவனங்களின் வரியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதனால் இந்தியாவின் மதிப்பு கூடும், முதலீடுகள் வரும், ஏற்றுமதி அதிகரிக்கும், வேலை வாய்ப்புகள் கூடும், பணப்புழக்கம் அதிகரிக்கும், நிறுவன பங்குகள் வைத்து இருப்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். 
-    அமித்ஷா (மத்திய உள்துறை அமைச்சர்)

*    புதிய  மின் இணைப்புக்கான டிபாசிட் தொகையை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் முடிவு செய்கிறது. அது குறித்து நான் கருத்து கூற முடியாது.
-    தங்கமணி (தமிழக மின் துறை அமைச்சர்)

*    எங்கள் கட்சியிலிருந்து நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. அதேசமயம், போகிறவர்களைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. தினகரன் சொன்னது போல், அ.ம.மு.க.வில் இருக்கிறாரா இல்லையா என்பதை புகழேந்திதான் முடிவு செய்ய வேண்டும்.
-    சி.ஆர்.சரஸ்வதி (கொ.ப.செ - அ.ம.மு.க.)

*    வந்தாரை எல்லாம் ஆள வைக்கிறோம். ஆனால் நாம் ஆண்டிருக்கிறோமா? இல்லை. இனமான அன்பு மணி தமிழக முதலமைச்சராகவும், காடுவெட்டி குரு தமிழக துணை முதல்வராகவும் ஆக வேண்டும் என்று நான் பெரிதும் ஆசைப்பட்டேன். 
-    பேராசிரியர் தீரன் (பா.ம.க. நிர்வாகி)

*    மாநில தலைவர் அழகிரி, மோடியை பற்றிச் சொன்னது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை. ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் நாம் ஆட்சியில் இருந்தோம். நம்மை வீழ்த்துவது அவ்வளவு எளிதான விஷயமாக இருந்ததில்லை. ஆனால் பலமான எதிரியை இப்போது பார்க்கிறோம். மோடியை வீழ்த்துவதற்கான வியூகத்தை இந்திய அளவில் அமைக்க காங்கிரஸ் முன்வர வேண்டும்:    
-    இ.வி.கே.எஸ். இளங்கோவன்.
*    தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, நடிகர் விஜய் சமீபத்தில்ல் ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினார். அதன் தாக்கம் தான், சமீபத்தில் நடந்த அவரின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழக அரசு மீது அவர் சாடியது. அந்த உண்மை இப்போதுதான் தெரியவந்துள்ளது. 
-    செல்லூர் ராஜு (தமிழக அமைச்சர்)

click me!