நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்....ஸ்டாலின்  மனு மீது நாளை விசாரணை...

 
Published : Feb 21, 2017, 12:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்....ஸ்டாலின்  மனு மீது நாளை விசாரணை...

சுருக்கம்

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்....ஸ்டாலின்  மனு மீது நாளை விசாரணை...

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவா் ஸ்டாலின் அளித்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் சட்டசபையில் நடந்த அமளியால் எதிர்க்கட்சியினர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எதிர்கட்சியினர் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது செல்லாது என ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

ஆனால் உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்  மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு