1008 இருந்தாலும் முதல் ஆளாய் முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்..!

By ezhil mozhiFirst Published Sep 1, 2019, 1:01 PM IST
Highlights

தெலுங்கானா  மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல் ஆளாய் முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1008 இருந்தாலும் முதல் ஆளாய் முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்..! 

தெலுங்கானா  மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல் ஆளாய் முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் அன்புச் சகோதரி டாக்டர். திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னைத் தமிழைப் போற்றும் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து, ஆளுநர் பொறுப்பை ஏற்கும் அவர், அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் பாதுகாப்பார் என்று பெரிதும் நம்புகிறேன்" இவ்வாறு  தெரிவித்து உள்ளார்.\

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும்  திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் மூண்டது என்று கூட சொல்லலாம். முதல்வர் எடப்பாடி சேலம் சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அப்போது எடப்பாடி உடன் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் அவரால் எங்காவது செல்ல முடியுமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பவே அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழிசை, இது என்ன கேள்வி? இது என்ன சினிமாவில் நடிப்பது போன்ற விவகாரமா? அப்படிப்பார்த்தால் நான்கூட சவால் விடுக்க முடியும் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா? என கேட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டாலின், "எதையுமே புள்ளிவிவரம் இல்லாமல் பேசும் தமிழிசை, எச் ராஜா, பொன் ராதா உள்ளிட்டோருக்கு பதில் சொல்ல ஏதுமில்லை.. அவர்கள் வாய்க்கு வந்ததெல்லாம்  பேசுவார்கள் என தெரிவித்து இருந்தார். பின்னர் இதற்கும் மீண்டும் பதிலடி கொடுக்கும் விதமாக தமிழிசை சௌந்தரராஜன், ஒரு மணி நேரம் அல்ல துண்டு சீட்டு இல்லாமல் புள்ளி விவரத்தோடு 3 மணி நேரம் கூட தன்னால் பேச முடியுமென சரமாரி தாக்குதல் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு பாஜக தலைவர் பதவி விரைவில் முடிய போகிறது என நக்கலும் நையாண்டியுமாக உட்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் என்பதற்கு ஏற்ப இன்று தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு சமூகவலைத்தளத்தில் பெருமளவு வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவு குவிந்து வரும் சமயத்தில் முதல் ஆளாய் முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார் மு க ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!