அடுத்த பிரதமர் ஸ்டாலின்தான் !! அடித்துச் சொல்லும் காங்கிரஸ் தலைவர் !!

By Selvanayagam PFirst Published Nov 19, 2018, 7:23 AM IST
Highlights

மத்தியில் ஆளும் மதவாத பாஜகவை வீழ்த்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சியம் என்றும் யார் பிரதமராக வரவேண்டும் என்பது முக்கியமல்ல. தேவைப்பட்டால், மு.க.ஸ்டாலின் கூட பிரதமராவார்  என்றும் தமிழக  காங்கிரஸ் கட்சியின் முனனாள்  தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடியாக தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் தேர்தல் பணிகளை இரு கட்சிகளுமே ஜரூராக தொடங்கிவிட்டன.

அதே நேரத்தில் பாஜக ஆட்சியை வீழ்த்த ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு சிறப்பு வியூகம் அமைத்து வருகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சரத்பவார், ஃபரூக் அப்துல்லா, யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து அணி திரட்டி வருகிறார்.

இதே போல் சென்னை வந்த அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாஜக அரசை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்தினார் சந்திரபாபு நாயுடு சென்னை வந்து சென்ற பிறகு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தத், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் வநது ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளின்  தலைவர்களின் பார்வை ஸ்டாலின் பக்க்ம் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முனனாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஸ்டாலின் பிரதமர் ஆக வாய்ப்பு இருப்பதாக அதிரடியாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்தியா முழுவதும் வலிமையாக இருக்கிற காங்கிரஸ் கட்சியை மையமாகக் கொண்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இதில் தவறேதுமில்லை. மதவாத சக்தியை அழிக்கவேண்டும் என்பதே முக்கியம். அந்த ஆட்சியை அகற்றவேண்டும் யார் தலைமை ஏற்று ஒருங்கிணைக்கிறார்கள் என்பதெல்லாம் அவசியமே இல்லை.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, இதுவரை எந்தத் தேர்தலிலும் இவர்தான் பிரதமர் என்று சொன்னதே இல்லை. ராஜீவ்காந்தியையும் அப்படி அறிவிக்கவில்லை. அவ்வளவு ஏன்... ஜவஹர்லால் நேரு காலத்தில் கூட, நேருதான் பிரதமர் என்றெல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்யவில்லை.

இப்போதைய சூழலில், பாஜக ஆட்சியை அகற்றவேண்டும். மாநிலவாரியாக உள்ள எல்லாக் கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையவேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதுதான் காங்கிரஸின் விருப்பம். அதேவேளையில், எங்கள் அணியில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட பிரதமராகலாம் என அதிரடியாக தெரிவித்தார்..இது கொஞ்சம் புதுசுதான் !!

click me!