'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்.செல்லூர் ராஜூ.!

By T BalamurukanFirst Published Oct 27, 2020, 8:41 AM IST
Highlights

'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு' மக்களை ஏமாற்றுவார். பொதுமக்கள் யாரும் நம்பாதீர்கள் என்றும் விவசாயி யார், விவசாயி போல் நடிப்பது யார் என பொதுமக்களுக்கு நன்றாக தெரியும் என கிண்டலும் கேளியுமாக விமர்சனம் செய்துள்ளார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.
 

'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு' மக்களை ஏமாற்றுவார். பொதுமக்கள் யாரும் நம்பாதீர்கள் என்றும் விவசாயி யார், விவசாயி போல் நடிப்பது யார் என பொதுமக்களுக்கு நன்றாக தெரியும் என கிண்டலும் கேளியுமாக விமர்சனம் செய்துள்ளார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றிய பகுதியான கீழமாத்தூர் பகுதியில் 45.45 லட்சம் செலவில் தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிக்கு பூமி பூஜையை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது... "மத்திய அரசு, மாநில அரசு இணைந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கு அதிகமான தடுப்பணை அமைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். அதிமுக அரசு செய்வதை தான் சொல்வோம் சொல்வதை தான் செய்வோம்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நகை கடனை தள்ளுபடி செய்கிறோம் என பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றார். 'கூரை ஏற தெரியாதவன் வானத்தில வைகுண்டத்த பாப்போம்னு' எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்லுவார் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்து நடிக்கிறார். தி மு க – காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள் அப்போது கருணாநிதி, ஸ்டாலின் என்ன வேடிக்கை தான் பார்த்தார்கள். ஸ்டாலின் ஆட்சிக்கும் வர மாட்டார். பொதுமக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்.விவசாயி யார், விவசாயி போல் நடிப்பது யார் என பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். "கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு" மக்களை ஏமாற்றுவார். பொதுமக்கள் யாரும் நம்பாதீர்கள். நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே மாணவர்கள் சேர்க்கை நடத்துவோம் என அதிமுக தீர்மானித்துள்ளது. இதுவே திமுகவாக இருந்தால் வேடிக்கை பார்ப்பார்கள். 

click me!