’படுபாதக துரோகிகள்! கட்சியை கவுத்திட்டானுங்களே!’: மிட்நைட்டில் கொந்தளித்த ஸ்டாலின்! அந்த ரிப்போர்ட்டில் என்னதான் இருந்தது?

By Vishnu PriyaFirst Published Apr 18, 2019, 1:33 PM IST
Highlights

விடிந்தால் தேர்தல்! என்று அத்தனை கட்சிகளும் உச்சக்கட்ட பரபரப்பில் இருந்த நேரம். நேற்று  இரவு சுமார் பதினொன்றரை மணிக்குப் பிறகு ஸ்டாலினின் கைகளுக்கு ஒரு ரிப்போர்ட்டை சேர்த்திருக்கிறது அவரது அரசியலுக்காக இயங்கி வரும் ஓ.எம்.ஜி. டீம். 

விடிந்தால் தேர்தல்! என்று அத்தனை கட்சிகளும் உச்சக்கட்ட பரபரப்பில் இருந்த நேரம். நேற்று  இரவு சுமார் பதினொன்றரை மணிக்குப் பிறகு ஸ்டாலினின் கைகளுக்கு ஒரு ரிப்போர்ட்டை சேர்த்திருக்கிறது அவரது அரசியலுக்காக இயங்கி வரும் ஓ.எம்.ஜி. டீம். அதை வாசித்துப் பார்த்த ஸ்டாலின் உச்சகட்ட டென்ஷனுக்கு போயிவிட்டாராம். 

அப்படி என்ன இருந்தது அந்த ஃபைலில்?....

விவகாரத்தின் வீரியத்தை அறிந்த தி.மு.க. மேல்நிலை நிர்வாகிகள் சொல்வது இதுதான்...”இன்று தேர்தல் நடைபெறும் பதினெட்டு தொகுதிகளில் சுமார் பனிரெண்டு தொகுதிகளில் உள்ள எங்கள் கட்சியில் நகர, ஒன்றிய மற்றும் கிளைச் செயலாளர்கள் கணிசமானவர்களை ஆளுங்கட்சி விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ரகசியமாம. இவர்கள் கட்சி மாறவுமில்லை, மாறப்போவதுமில்லை. தி.மு.க.வில்தான் இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இவர்கள் வீரியமாக தேர்தல் பணியே பார்க்கவில்லை. முழுக்க முழுக்க அ.தி.மு.க.வுக்கு சப்போர்ட்டாக இருக்கும் பொருட்டு அமைதியாக இருந்துவிட்டார்கள். 

இதற்கு சன்மானமாக, அவர்களின் பதவி, செல்வாக்கு மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து லட்சக்கணக்கில் பணத்தை அடித்திருக்கிறது அ.தி.மு.க. இந்த ரிப்போர்ட் தளபதியின் கைகளுக்கு நேற்று நள்ளிரவில் சென்றதும், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அதை கிராஸ் செக் செய்து பார்த்தவர், உண்மை என்று புரிந்து டென்ஷனாகிவிட்டார். ‘படுபாதக துரோகிகள். நான் உயிரைக் கொடுத்து கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த போராடுகிறேன். கேவலம் பணத்துக்காக காட்டிக் கொடுத்துவிட்டார்கள்.’ என்று பிரஷர் ஏறிவிட்டார்.” என்றார்கள். 

தி.மு.க.வின் உள் அரசியலை கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் பேசியபோது...”உண்மைதான். சமீபத்தில் வெளியான பல சரவேக்களின் முடிவுகள் ஆளும் தரப்புக்கு பாதகமாகவே இருந்திருக்கிறது. இதை கவனித்து கவலையுற்ற அந்த தரப்பு மக்களை எக்ஸ்ட்ராவாக கூல் செய்ய நினைத்தது. ஆனால் ‘காச வாங்குவோம். ஆனால் ஓட்டு தி.மு.க.வுக்குதான் போடுவோம்.’ என்று சிலர் வெளிப்படையாக தெனாவெட்டு காட்டியிருக்கின்றனர். 

விளைவு, நேராக  பத்து, பனிரெண்டு தொகுதிகளில் தி.மு.க.வினரின் நிர்வாகிகள் கணிசமானவர்களை வளைத்துவிட்டார்கள். ’எட்டு வருஷமா உங்க கட்சி  ஆட்சியில் இல்லை. எவ்வளவு கஷ்டத்துல இருக்கீங்கன்னு புரியும். இப்போ உங்க கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே கூட சம்பாதிக்கிற வாய்ப்பு இன்னும் சில வருஷங்களுக்கு உங்களுக்கெல்லாம் வரப்போறதில்லை. அதனால இதைப் பிடிங்க, கமுக்கமா இருந்துடுங்க. ‘ என்று நேக்காக பேசி, அள்ளிக் கொடுத்து வளைத்துள்ளார்கள். 

இதற்கு கைமாறாக இவர்கள் ஆளுங்கட்சிக்கு ஓட்டு கேட்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் தங்கள் கட்சிக்காக உழைக்காமல் செய்துவிட்டார்கள். இடைத்தேர்தலில் வென்று, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் அ.தி.மு.க. இதை அரசியல் சாணக்கியத்தனமாக பார்க்கிறது.” என்கின்றனர். 

ஆனால் விலை போனதாக விமர்சிக்கப்படும் தி.மு.க.வினரோ, தங்கள் மாவட்ட செயலாளர்களிடம் “அண்ணே, அவங்க கோடி கோடிய சொத்து சேர்த்து வெச்சிருக்காங்க. லட்சங்களை கொண்டாந்து கொட்டினாங்க. நம்ம கட்சிக்கு எதிரா நாங்க பிரசாரம் செய்யவுமில்லை, அதேநேரத்து அமைதியாகவுமில்லை. வழக்கம்போல நம்ம வெற்றிக்கான வேலையை பார்த்திருக்கிறோம். பைபாஸ்ல அவங்க சம்பாதிச்ச காசை பைபாஸ்ல வாங்கிட்டோம். அவ்வளவுதான்.” என்று லாஜிக் பேசி மழுப்பியுள்ளார்களாம்.

click me!