யோகியை விஞ்சிய ஸ்டாலின்..? இது திராவிட மாடல் இல்ல உ.பி மாடல்.. 20 கோடியில் ஆவடியில் பசு மடம்.! சீமான் அவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2022, 4:49 PM IST
Highlights

பாஜகவை அதன் அரசியலை எதிர்க்கிறோம் என கூறி வரும் திமுக பாஜக ஆட்சியாளர்களேயே விஞ்சும் அளவிற்கு பசுமடம் கோயில் யானைகளுக்கு நினைவு மணிமண்டபம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை அதன் அரசியலை எதிர்க்கிறோம் என கூறி வரும் திமுக பாஜக ஆட்சியாளர்களேயே விஞ்சும் அளவிற்கு பசுமடம் கோயில் யானைகளுக்கு நினைவு மணிமண்டபம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் பாஜகவினர் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இந்து விரோத கட்சி என விமர்சித்து வரும் நிலையில் இல்லை இல்லை இந்துக்களுக்கு ஆதரவான கட்சிதான் திமுக என்பதை காட்டுவதற்காக வலியவந்து இது போன்ற செயல்களில் அக்கட்சி ஈடுபடுகிறது என்ற விமர்சனமும் திமுகவில் இருந்து வருகிறது.

திராவிட மாடல், சமூகநீதி, தந்தை பெரியார் கொள்கை என பேசிவருகிறார் முதல்வர் ஸ்டாலின், மறுபுறம் அவரது துணைவியார்  அடிக்கடி கோவில்களுக்கு சென்று  பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டு வருகிறார், திமுக ஆட்சி ஏற்றது முதல் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் பல்வேறு கோவில்களுக்கு குடமுழுக்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது,

இது அனைத்துமே பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் திமுகவுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களை முறியடிப்பதற்கான உத்தியாகவே திமுக இதை கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நான் வட இந்தியாவில் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலமான உத்தரப் பிரதேசதில் பசு மடம் மற்றும் கோமாதா வழிபாடு பூஜை என பசுவுக்கு புனஸ்காரங்கள் மேற்கொள்ளப்படுவது போல இதுவரை எந்த அரசும் செய்யாத அளவிற்கு தமிழகத்தில் முதல் முறையாக திமுக அரசு ஆவடியில் பசுமடம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இது பல திராவிட இயக்க ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் மறைமுகமாக இந்துத்துவத்தை திமுக கையில் எடுக்க ஆரம்பித்து விட்டது என்ற விமர்சனத்தையும் அவர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

சென்னையின் பூர்வீகக்குடிகளின் வாழ்விடங்களை இடித்துத்தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு; இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு! சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறதெனக் கூறி, அதனைத் தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக்கோருகிறோம். இறந்துபோன கோயில் யானைகளுக்குக் கோயில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி அரசு! இல்லை! இல்லை! மனுநீதி அரசு!

கோவையில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத திமுக அரசு, கோயில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத் துடிப்பது வெட்கக்கேடானது.

அரசின் பெயரில் கடன் வாங்கும் 90,000 கோடி ரூபாயில்தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!