இது கிரிமினல் கேபினெட்: கரூரில் கர்ஜிக்கும் ஸ்டாலின்!

Published : Dec 27, 2018, 07:33 PM ISTUpdated : Dec 27, 2018, 07:43 PM IST
இது கிரிமினல் கேபினெட்: கரூரில் கர்ஜிக்கும்  ஸ்டாலின்!

சுருக்கம்

அ.ம.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு தாவிய செந்தில் பாலாஜி இன்று கரூரில் பெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 

அ.ம.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு தாவிய செந்தில் பாலாஜி இன்று கரூரில் பெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 

திருமாநிலையூர் எனும் இடத்தில் நடந்து வரும் மெகா கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றும் ஸ்டாலின் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசை கிழி கிழியென கிழித்திருக்கிறார் கலா மாஸ்டர் ஸ்டைலில். 


”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் வழக்கு, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு, அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு, ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு...இதோ இந்த ஊரின் விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் இப்படி ஒட்டுமொத்த அமைச்சரவை மீதும் ஊழல் புகார்.

ஆக மொத்தத்தில் இது ஒரு கிரிமினல் கேபினெட், கிரிமினல் கேபினெட்!” என்று போட்டுப் பொளந்திருக்கிறார். 

இது ஒருபுறமிருக்க, கரூர் பொதுக்கூட்டத்தை நோக்கி வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.கவுக்கு தாவும் கூட்டத்தை மாவட்ட எல்லையில் போலீஸ் தடுத்து நிறுத்தியதாக செந்தில் பாலாஜி புகார் கிளப்பியிருப்பது காமெடியாகவே பார்க்கப்படுகிறது அரசியல் அரங்கில்.

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!