
குட்கா மாமூல் விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைக்கும் குடோன்களை நடத்தியவர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் சென்னை மாநகர காவல்துறை கைகட்டி நின்று ஊழியம் செய்துள்ளார்கள் என தெரிவித்தார்.
குட்கா விற்பனை செய்ய 40 கோடி பாய் லஞ்சம் பெற்றதாக ஆங்கில நாளிதழில் செய்து வந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இப்பிரச்சனையை இன்று சட்டப்பேரவையில் எழுப்பப் போவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.