ஐபேக் விடம் திமுகவை அடகு வைத்த ஸ்டாலின்...! திக்குமுக்காடும் திமுக மா.செக்கள்..!

By T BalamurukanFirst Published Nov 17, 2020, 7:25 AM IST
Highlights

கடந்த சட்டமன்றத்தேர்தல் களம் திமுகவிற்கு சாதகமாக இருந்தும் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாமல் அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.  மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக இருந்தும் ஏன் தோற்றுப்போனது என்பதை ஆய்வு செய்து பார்த்த பிறகு அசந்து போனார் ஸ்டாலின். மாவட்டச் செயலாளர்கள் செய்த உள்ளடி வேலை என்பதை புரிந்து கொண்டார் ஸ்டாலின். இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஐபேக் டீம்மை களமிறக்கியிருக்கிறது திமுக.

2021ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத்தேர்தல் கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் "டிஜிட்டல் தேர்தல்" என்று அழைக்கிறார்கள்.இந்த நிலையில் திமுக சார்பில் முக.ஸ்டாலினும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும் முதல்வர் வேட்பாளராக களமிறங்க காத்திருக்கிறார்கள். வடமாநிலங்களில் அரசியல் ஆலோசகராக இருந்து அரவிந்த் கெஸ்ரிவால் ஜெகன்மோகன்ரெட்டி மோடி உள்ளிட்டவர்களை  முதல்வர் நாற்காலியில் அமரவைத்தவர் பிரசாந்த்கிஷோர்.அவரை தமிழகத்திற்கு இறக்குமதி செய்திருக்கிறார் ஸ்டாலின். தன்னை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பார் பிகே.என்கிற நம்பிக்கையில் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 

இந்த நிலையில் திமுக வெற்றியை தீர்மானிக்க பிகே பிரமாண்டமாக திட்டம் போட்டிருக்கிறாராம்.திமுக 150 இடங்களில் வெற்றி பெறும்.கூடுதலாக 30 இடங்களில் வெற்றி பெற வைக்கிறேன் என்று ப்ராமிஸ் கொடுத்திருக்கிறாராம் பிகே. 180 இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இன்னும் பல கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கண்டிசன்கள் போடப்பட்டு வருகிறதாம். அந்த கண்டிசன்களுக்கு ஒத்து வரும் கட்சிகள் மட்டுமே எங்களுடன் இருங்கள் இல்லையென்றால் மூட்டையை கட்டிக்கொள்ளுங்கள் என்று தெணாவட்டாக பேசி வருகிறார்களாம். இதனால் கூட்டணிக்கட்சிகள் குழப்பமடைந்து இருக்கிறார்கள்.

 இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச்செயலாளர்கள் என பிரித்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்திருக்கிறது திமுக தலைமை.புதிதாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச்செயலாளர்கள் ஸ்டார் வேட்பாளர்கள்  போட்டியிடும் தொகுதிகளில் ஐபேக் டீம் இரண்டாவது முறையாக சர்வே எடுக்கும் பணியை மேற்க்கொண்டுள்ளது. திமுக ஆட்சியை கைப்பற்றும் என்கிற கனவில் மாவட்டச்செயலாளர்கள் உள்ளடி வேலை பார்க்கும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிற தகவல் ஐபேக் டீம்க்கும், திமுக தலைமைக்கும் சென்றிருக்கிறது.
 
click me!