ஸ்டாலினுக்கு அவரது கட்சியிலேயே செல்வாக்கு குறைவதால் என்னென்னமோ பேசுகிறார் - டிடிவி தினகரன் பதிலடி...

 
Published : Jan 29, 2018, 09:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
ஸ்டாலினுக்கு அவரது கட்சியிலேயே செல்வாக்கு குறைவதால் என்னென்னமோ பேசுகிறார் - டிடிவி தினகரன் பதிலடி...

சுருக்கம்

Stalin loss his influence in his party - TTV Dinakaran

தஞ்சாவூர்

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், தினகரன் பாகஜவுடன் கூட்டணி வைப்பார் என்று கூறியதற்கு "ஸ்டாலினுக்கு அவர்களது கட்சியிலேயே செல்வாக்கு குறைந்து வருவதால் அதனை சரி செய்ய தேவையில்லாததை பேசி வருகிறார்" என்று தினகரன் பதிலடி கொடுத்தார்.

என்று தஞ்சையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "ஜெயலலிதா பெயரை கூறி தமிழகத்தில் பொய்யான ஆட்சியை நடத்தி வருகின்றனர். இது மக்களுக்கான விரோதமான அரசாக செயல்பட்டு வருகிறது.

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் என்னை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பேன் என்று கூறியுள்ளார். எனக்கு தெரிந்தது வரை ஸ்டாலினுக்கு அவர்களது கட்சியிலேயே செல்வாக்கு குறைந்து வருகிறது. அதை சரிசெய்ய தேவையில்லாததை பேசி வருகிறார்.

ஜீயர், மடாதிபதிகள் சாதாரணமானவர்கள் இல்லை. பொதுமக்களை விட வித்தியாசமானவர்கள். அவர்கள் தேவையில்லா குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஜீயர்கள், மடாதிபதிகள் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்திருக்க மாட்டேன் என்று கூறியது அவமதிப்பதாகும். இது போன்ற பேச்சு தேவையில்லாதது ஆகும்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் ஆணையம் அமைத்து தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். கர்நாடகாவில் வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு பாராமுகம் காட்டி வருகிறது.

முத்தலாக் என்பது பல நூறு ஆண்டுகளாக பின்பற்றி வருகிற பழக்கம். அதில் தலையிடுவது கூடாது. முத்தலாக் பிரச்சனை அவசரகதியில் மத சுதந்திரத்தை பின்பற்றாமல் செயல்படுத்தி உள்ளனர். மத்திய அரசின் இந்த செயல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த விவகாரத்தில் அவர்களை அழைத்து பேசுவதுதான் சரியானதாகும். முத்தலாக் வி‌ஷயத்தில் நீதிமன்றம் சொல்வதை கேட்கும் மத்திய அரசு ஏன் காவிரி விவகாரத்தில் நீதிமன்றம் சொன்னபடி நடக்கவில்லை? என்று தெரியவில்லை.

பேரூந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது கண்துடைப்பு நடவடிக்கை. இதில் கௌரவம் பார்க்காமல், மக்கள் நலன் பகுதி பேருந்து கட்டண உயர்வை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். அவ்வாறு இரத்து செய்தால்தான் மக்களுக்கு நல்லது.

என்னை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை வேண்டுமானால் அகற்றலாம். மக்களை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது.

ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் விரக்தியில் என்னை பற்றி பேசுகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு