
திமுக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் இன்று திடீர் விசிட் செய்தார். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
அப்போது புது ரூபாய் பிரச்சனையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறினர். பின்னர் அப்பகுதியில் உள்ள வங்கிகள் முன்னால் கியூவில் நின்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பொதுமக்கள் புதிய ரூபாய் தாள்களை பெறுவதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள், இதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.