உடல்நல பரிசோதனைக்காக லண்டன் செல்கிறார் ஸ்டாலின்.?? தளபதிக்கு என்ன ஆச்சு.. உபிக்கள் கவலை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 11, 2020, 1:48 PM IST
Highlights

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் சென்னை முழுக்க மழை வெள்ளத்தின்போதும் நிவாரண பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கினார். 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை வகுத்துவருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் அதற்கான காய்நகர்த்தல்களிலும், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் ஏற்பட்ட  பருவமழை, புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதிமுக- திமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்கி வருகின்றன. 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் சென்னை முழுக்க மழை வெள்ளத்தின்போதும் நிவாரண பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக உடனே அருகில் இருந்த தனியார் மருத்துமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கிருந்து பரிசோதனை முடிந்து வீடுதிரும்பியுள்ளார், அவருடன், துரைமுருகன்,  டி.ஆர் பாலு, சபரீசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அவர் ஓய்வெடுக்க டாக்டர்கள்  அறிவுறுத்தினார்கள் என்றும் இதுதொடர்பாக ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டது. லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக லண்டன் செல்ல உள்ளதாகவும் உறுதி படுத்தப்படாத  தகவல்கள் வெளியாகி உள்ளது. இது திமுக தொண்டர்கள் மத்தியில் மிக்பெரிய அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினுக்கு என்ன ஆனது? அவர் உடலுக்கு என்ன பிரச்னை என்ற கவலையில் திமுகவினர் ஆழ்ந்துள்ளனர். 

 

click me!