
கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வரை டெபாசிட் செய்யப்படும் என கூறி விட்டு15 ரூபாய் கூட போடாத நரேந்திர மோடி மாநில அரசின் உரிமையை பறிக்க பார்கிறார் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவும் வாங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் விவசாயத்திற்காக கூட மாடுகளை வாங்க பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. மேலும், கேரளா, கர்நாடக, மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இச்சத்தை அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதன்படி திமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வரை டெபாசிட் செய்யப்படும் என பிரதமர் மோடி கூறியதாகவும், ஆனால் 15 ரூபாய் கூட இதுவரை போடவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி விட்டு இதுவரை எந்த வேலை வாய்ப்பையும் யாருக்கும் வழங்கவில்லை எனவும், பா.ஜ.க கூறிய எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார்.
விவசாயிகள் ஏற்கனவே வறட்சி காரணமாக பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மேலும் மேலும் மத்திய அரசு இன்னல்களை கொடுத்து வருவதாக குறிபிட்டார்.
மாட்டிறைச்சிக்கு தடை விதித்து 8 நாட்கள் ஆகியும் தமிழக மாநில முதலமைச்சரான எடப்பாடி இதுவரை எந்த கருத்தும் கூறாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்தார்.