தமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jan 27, 2021, 4:18 PM IST
Highlights

மீனவர்களின் உடல்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் எரிந்து கருகிய நிலையில் இருந்தன. எனவே, 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கொடூரமான முறையில் தாக்கி படகில் இருந்த டீசலை அவர்கள் மீது ஊற்றி எரித்துக் கொன்று பின்னர் படகை மூழ்கடித்திருக்கலாம். 

ராமநாதபுரம்மாவட்டத்தைச்சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதிவிசாரணை கேட்டு  மீனவர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 

கோட்டைப்பட்டிணம் கடற்கரையிலிருந்து கடந்த 18ம் தேதி ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசேசு என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச்சென்ற ராமநாதபுரம் மாவட்ட  மீனவர்கள் 4 பேர் பாக்ஜலசந்தி கடற்பகுதியில்  மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை வழிமறித்து தங்களது ரோந்து கப்பலால் படகை மோதி சேதப்படுத்தியுள்ளனர். இதில் படகு கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் மூழ்கி பலியாகினர்.

மீனவர்களின் உடல்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் எரிந்து கருகிய நிலையில் இருந்தன. எனவே, 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கொடூரமான முறையில் தாக்கி படகில் இருந்த டீசலை அவர்கள் மீது ஊற்றி எரித்துக் கொன்று பின்னர் படகை மூழ்கடித்திருக்கலாம் என சந்தேகிப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் 4 பேரின் கொலைசம்பத்தை இந்திய அரசு விசாரணைசெய்து உண்மையை கண்டறியவேண்டும், இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவுசெய்ய வேண்டும். சிறைபிடிப்பு நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். 

கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை மீட்டுத்தரவேண்டும்’’என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான மீனவர்கள் மற்றும் உயிரிழந்தமீனவர்களின் உறவினர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து மீனவர்பிவு மாநில செயலாளர் டோம்னிக் ரவி கூறுகையில், " இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை தாக்கி வருகின்றனர். வலை உள்ளிட்ட சாதனங்களையும் சேதப்படுத்துகின்றனர். படகுகளை கப்பலால் மோதி சேதப்படுத்தி கடலில் மூழ்கடிப்பதும் தொடர்கிறது. 4 மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தரவேண்டும்.

இலங்கைக்கடற்படையினர் மீனவர்களை படகுடன் சிறைபிடித்து செல்லும் நடவடிக்கையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"  இதனை வலியுறுத்தி  தங்கச்சிமடத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். இதனைத்தொடர்ந்து நீதி கிடைக்கும்வரை நாடுதழுவிய போராட்டங்களைநடத்துவோம் என்று கூறினார்.
 

click me!